Memes: இதோ அதோ என நியூ இயர் முடிந்து பொங்கல் பண்டிகையும் வரப்போகிறது. இந்த முறை பொங்கல் செவ்வாய்க்கிழமை என்பதால் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் தான்.
அதிலும் தமிழக அரசு 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. அதனால் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் லீவ் என்பதால் எல்லோருக்கும் கொண்டாட்டம்தான்.
அப்புறம் என்ன சொந்த ஊருக்கு கிளம்புபவர்கள் இப்போது பொட்டியை கட்ட தொடங்கிவிட்டனர். அதில் திங்கள் கிழமை ஒருநாள் லீவு எடுத்து விட்டால் சனி ஞாயிறு சேர்த்து பத்து நாள் கொண்டாட்டம் தான்.
அதனால் மாணவர்களுக்கு இந்த மாதம் ரொம்ப பிடித்த மாதமாக மாறிவிட்டது. ஆனாலும் குடியரசு தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதைத் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இப்படியாக பொங்கலை வரவேற்க ஒவ்வொருவரும் தயாராகி இருக்கின்றனர். என்னும் சிலர் தைப்பொறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
ஆனால் வழி எங்கப்பா இருக்கு எல்லாமே முட்டு சந்து என ஏகப்பட்ட மீம்ஸ் வைரலாகி வருகிறது. இப்படி இணையத்தை கலக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.