Director Bala : பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் வணங்கான். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து உள்ளார். ஆரம்பத்தில் சூர்யாவை இந்த படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால் பாலா மற்றும் சூர்யா இடையே முற்றிய சண்டையால் அவர் இப்படத்தில் இருந்து வெளியே வந்து விட்டார்.
அதன் பிறகு தான் அருண் விஜய் இந்த படத்தில் கமிட்டானார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் வணங்கான் படக்குழுவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது வணங்கான் பட டைட்டிலை பயன்படுத்தக்கூடாது என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது எஸ் சரவணன் வழக்கு தொடர்ந்திருந்தார். படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் சமயத்தில் இது புது பிரச்சனையை கிளப்பியதால் படக்குழுவுக்கு மிகுந்த தலைவலியாக இருந்தது.
பாலாவின் வணங்கான் டைட்டிலுக்கு கிடைத்த தீர்வு
உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யபட்ட நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட எஸ் சரவணன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் வணங்கான் டைட்டிலை பாலா பயன்படுத்தலாம் என தீர்ப்பாகியுள்ளது. இதனால் படத்திற்கான ரிலீஸ் வேலை மும்மரமாக நடந்து வருகிறது.
மேலும் அருண் விஜய்யும் பாலா படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களுக்கு ஆரம்பத்தில் பிள்ளையார் சூழியாக இருந்தது பாலா தான். அதேபோல் இப்போது அருண் விஜய் தனது நடிப்பு திறமையால் கமல் சினிமாவில் நல்ல பெயர் வாங்கி வருகிறார்.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான யானை படம் அவருக்கு ஓரளவு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதேபோல் வணங்கான் படமும் கண்டிப்பாக அருண் விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கிறார்.
வணங்கானுக்காக காத்திருக்கும் அருண் விஜய்
- அருண் விஜய்யை சைக்கோவாக மாற்றிய பாலா
- 30 வருட சினிமா வாழ்க்கையில் அருண் விஜய் சம்பாதித்த சொத்து
- எல்லாத்துலயும் அருண் விஜய்க்கு கை கொடுக்கும் 2வது ஆப்ஷன்