புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நாங்க கொடுக்கிற காசு, புகழ் மட்டும் வேணுமா? விஜய்யை கிழித்து தொங்கவிடும் மீடியா

சமீப காலமாகவே விஜய் பற்றிய செய்திகள் தான் மீடியாவில் அதிகமாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் அவர் படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அதில் தற்போது சில மீடியாக்கள் இவரை மோசமாக விமர்சித்து கிழித்து தொங்க விட்டு வருகின்றனர்.

அதாவது சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் நம் தென்னிந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் வகையில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை தட்டி தூக்கியது. அதேபோன்று தமிழ்நாட்டின் முதுமலையில் எடுக்கப்பட்ட குறும்படமும் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.

Also read: அஜித், விஜய் தியேட்டர்களில் தாலாட்டி தூங்க வைத்த 6 படங்கள்.. படு தோல்வி சந்தித்த சுறா

அதை ஒட்டுமொத்த திரையுலகமும் தற்போது பெருமையுடன் கொண்டாடி வருகிறது. மேலும் அனைத்து நடிகர், நடிகைகளும் படகுழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜய் மட்டும் இது குறித்து எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. இதுதான் தற்போது பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

மேலும் தெலுங்கு மீடியாக்கள் தான் இது குறித்து காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். ஏனென்றால் சமீபத்தில் அவர் தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கூட்டணியில் வாரிசு படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் அக்கட தேசத்தில் தன்னுடைய மார்க்கெட் உயர வேண்டும் என்றும் தன் படங்களுக்கு அங்கு நல்ல வசூல் கிடைக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

Also read: விஜய், அஜித்தை வைத்து ரஜினியோட அந்தப் படத்திற்கு அடி போடும் லோகேஷ்.. மெகா பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

அதனாலேயே அவர் தெலுங்கு திரை உலகில் சற்று அதிக கவனம் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு தெலுங்கு திரைப்படம் ஆஸ்கர் விருதை வாங்கி இருக்கிறது. அதை அனைவரும் கொண்டாடும் போது விஜய் மட்டும் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

மேலும் ஒரு தெலுங்கு படம் இப்படி ஒரு உயர்ந்த விருதை வாங்கி இருக்கிறது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா, நாங்கள் கொடுக்கும் காசு புகழ் மட்டும் வேணுமா என மீடியாக்கள் இது குறித்து கேள்வி கேட்டு கொந்தளித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படம் ஆஸ்கார் வென்றது விஜய்க்கு பொறாமையாக இருக்கிறதா என்ற ரீதியிலும் அவர்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.

Also read: அடுத்த சூப்பர் ஸ்டாராக பிளான் போடும் விஜய்.. சத்தம் இல்லாமல் தளபதி இடத்தை பறிக்கும் நடிகர்

Trending News