வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

தனுஷ் மற்றும் பாலா வாழ்வில் விளையாடிய விதி.. அட இதுல கூடவா ஒற்றுமை

கடந்த சில மாதங்களாகவே திரையுலகில் பிரபலங்களின் விவாகரத்து செய்தி தான் முக்கிய செய்தியாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார்.

இது திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அந்த சலசலப்பு சிறிது சிறிதாக அடங்கத் தொடங்கியது. அந்த சமயத்தில் நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக தன்னுடைய சோஷியல் மீடியாவில் அறிவித்தார்.

சூப்பர் ஸ்டார் வீட்டு விஷயம் என்பதால் இந்த செய்தி பெரும் பரபரப்பை கிளப்பியது. இது குறித்து பல்வேறு கருத்துக்களும், சர்ச்சைகளும் தற்போது வரை ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரபல இயக்குனர் பாலாவும் தன் மனைவி முத்து மலரை விவாகரத்து செய்து இருக்கிறார்.

தற்போது தனுஷ், பாலா பற்றிய செய்திதான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறது. ஏனென்றால் இருவருமே ஒரே வருடத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். அதேபோன்று ஒரே வருடத்திலேயே இருவரும் தங்கள் மனைவியை விவாகரத்து செய்து இருக்கின்றனர்.

தற்போது ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் விவாகரத்தில் கூட இப்படி ஒரு ஒற்றுமையா என்று குறிப்பிட்டுப் பேசி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தனுஷ் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பால் கடும் மன உளைச்சலில் இருக்கிறார் என்று பல செய்திகள் வெளிவந்தது.

அதிலிருந்து வெளிவருவதற்கான தான் அவர் தற்போது திரைப்படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அவரின் இதே பாணியைத்தான் தற்போது பாலாவும் கடைபிடித்து வருகிறார். அவரும் இந்த விவகாரத்தால் கடும் மன வருத்தத்தில் இருக்கிறார். மனைவியை பிரிந்தது கூட அவருடைய வருத்தத்திற்கு காரணம் இல்லை.

அவருடைய செல்ல மகளை பிரிந்ததுதான் அவரின் சோகத்திற்கு காரணம் என்று பலரும் கூறுகின்றனர். தற்போது அந்த மன உளைச்சலில் இருந்து தப்பிப்பதற்காக பாலா தன்னுடைய பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நடிகர் சூர்யாவை வைத்து இவர் இயக்கப் போகும் திரைப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளதால் பாலா அதில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து வருகிறார்.

Trending News