Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அப்பனைப் போல் கேவலமான முடிவு எடுத்த மகன்.. பத்திரகாளியாக மாறிய பாக்யா

அப்பனைப் போல் கேவலமான முடிவு எடுத்த மகன்.. பத்திரகாளியாக மாறிய பாக்யா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி துணிந்துவிட்டான். இருப்பினும் பாக்யாவிற்கு கோபியின் இத்தகைய நடவடிக்கை பற்றி துளிகூட தெரியாமல்  தன்னுடைய கணவனை மலைபோல் நம்பி […]

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கோபி துணிந்துவிட்டான். இருப்பினும் பாக்யாவிற்கு கோபியின் இத்தகைய நடவடிக்கை பற்றி துளிகூட தெரியாமல்  தன்னுடைய கணவனை மலைபோல் நம்பி இருக்கிறாள்.

இருப்பினும் கோபி, பாக்யாவை தொடர்ந்து ஏமாற்றி கொண்டிருப்பதுடன் தற்போது எல்லை மீறி ராதிகாவின் வீட்டிலேயே இரவில் தங்கும் தொடங்கிவிட்டான். இன்னிலையில் அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதத்தில் பாக்யாவின் மூத்தமகன் செழியன் கோபியை போலவே காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜெனியை நாளுக்கு நாள் வெறுத்துக் கொண்டிருக்கின்றான்.

கூட்டு குடும்பத்துடன் வாழ ஆசைப்படும் ஜெனியை தனிக்குடித்தனம் போக வேண்டும் என்ற தன்னுடைய முடிவை ஏற்க மறுத்ததால், அவள் மீது தொடர்ந்து வெறுப்பை காட்டிக் கொண்டிருக்கிறான். எனவே  இதைப்பற்றி செழியனிடம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனைவரும்  பேசியபோது, ‘சந்தோசமே இல்லாத இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை.

பேசாமல் விவாகரத்து கொடுத்து விடப் போகிறேன்’ என்று அனைவரின் முன்னிலையிலும் செழியன் கூறுகிறான். இதனால் ஆத்திரமடைந்த பாக்யா,  ‘பாதியிலேயே அம்போன்னு விட்டுட்டு போவதற்கு எதற்கு திருமணம் செய்து கொள்கிறீர்கள்.

நீ செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருப்பேன் என நினைக்காதே!  உன்னைத் தொலைத்து கட்டி விடுவேன்’ என செழியனிடம் பத்ரகாளியாக பாக்யா மாறியது கோபியை கதி கலங்க வைத்திருக்கிறது.

ஏனென்றால் விவாகரத்து என்ற வார்த்தையை சொன்னதற்காகவே செழியனை இந்த  வாங்கு வாங்கும் பாக்யாவிற்கு மட்டும், தான் செய்ததெல்லாம் தெரியவந்தால் என்ன நடக்கப் போகிறதோ என கோபி மிரண்டுபோய் உள்ளான்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.