விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பாக வருகிறது. அதாவது பாக்யாவை விட்டு வந்த கோபி ராதிகாவுடன் சேர்ந்தும் சந்தோஷத்தை இழந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டி தினமும் குடிப்பதை வழக்கமாக ஆக்கிவிட்டார். இந்நிலையில் பாக்யா மட்டும் சந்தோசமாக இருப்பதை பார்த்து புலம்பித் தவிக்கிறார்.
அதிலும் அவர் டியூஷனில் பழனிச்சாமி உடன் பேசுவதையும் அவரிடம் நட்பாக இருக்கும் பாக்கியாவை பார்த்து சந்தேகப்படுகிறார். பழனிசாமி வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி ரொம்பவே கடுப்பாகி விட்டார். அதை கடுப்பில் ஆபீஸ் முடித்து வீட்டுக்கு வரும்போது பாக்கியா போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி மிகவும் நக்கலாக யாருடன் இப்படி பல்லைக் காட்டி பேசிக் கொண்டிருக்கிறாள்.
Also read: பொறாமையில் பொங்கி எழும் கோபி.. இனி தான் பாக்கியலட்சுமி ஆட்டம் சூடு பிடிக்க போகிறது
இவளுடைய நண்பன் என்று ஒருத்தன் சுத்திட்டு இருப்பான் அவன் கூட தானே இருக்கும். என்று நக்கலாக பேசி மாடியில் இருக்கும் அவருடைய ரூமிற்கு செல்கிறார். அங்கே ஏற்கனவே ராதிகாவுக்கும் பாக்கியாவின் மாமியாருக்கும் நிறைய பஞ்சாயத்துக்கள் போனதால் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். என்னவென்று கோபி கேட்டதற்கு உங்க அம்மா இந்த மாதிரி எல்லாம் பேசுறாங்க நான் என்ன பண்ணாலும் சண்டை போடுறாங்க என்று சொல்கிறார்.
இதைக் கேட்ட கோபி ஏற்கனவே கோபத்தில் இருந்ததால் ராதிகா சொன்னதும் இன்னும் டென்ஷன் ஆகி கீழ போய் நான் கேட்டுட்டு வருகிறேன் என்று போகிறார். உடனே ராதிகாவும் அவருடன் கீழே போகிறார். ஏன் எதற்கெடுத்தாலும் ராதிகாவை எதையாவது சொல்லிட்டு இருக்கீங்க அவள் இந்த வீட்டு மருமகள் தானே. ஏன் எப்ப பாத்தாலும் அவகிட்ட பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.
Also read: கோபியின் அம்மாவிடம் சவால் விடும் ராதிகா.. அப்பாவைப் போல ரூட் போடும் செழியன்
உடனே ஈஸ்வரி அவை என்னைக்குமே இந்த வீட்டில் மருமகளாக ஆக முடியாது. பாக்கியா தான் எங்களுடைய மருமகள் என்று சொன்னதற்கு கோபி நீங்க இப்படி அவளை தலையில் தூக்கி வைத்து ஆட போய் தான் அவள் என்ன பண்றான்னு உங்க கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது என்று சொல்கிறார். உடனே எழில், என் அம்மாவை பத்தி ஏதாவது தப்பா பேசினா இருக்குன்னு சொல்லிட்டு கோபி இடம் சண்டைக்கு போகிறார்.
உடனே இதை தடுத்து நிறுத்தி செழியன், கோபியை அடிக்கவே கையை தூக்கி விட்டார். ஆனால் இதை செழியன் இடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் இவர் எப்போதுமே அப்பா பக்கம்தான் நின்று பேசுவார். அப்படி இருக்கும்போது இவர் பாக்யாவிற்காக முதல் முறையாக கோபியை எதிர்த்தது மட்டுமில்லாமல் கையை தூக்கி அடிக்க போனதும் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இதுவே கோபிக்கு கிடைத்த மிகப்பெரிய அவமானம். பிறகு இதை தடுத்து நிறுத்தி பாக்கியா, கோபியிடம் நான் என்ன பண்ணினா உங்களுக்கு என்ன. அதை கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்னுடைய விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
Also read: குணசேகரனுக்கு சரியான ஆளு நந்தினி.. ஜனனி கஸ்டடியில் அருண்