திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதி இல்லாத சூது கவ்வும் 2.. 10 வருடங்களுக்குப் பிறகு வேகம் எடுக்கும் படப்பிடிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரை பயணத்தில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம் சூது கவ்வும். 2013ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்குனராக அறிமுகமான பக்கா டார்க் காமெடி திரைப்படமாக ரிலீஸ் ஆன இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் விஜய் சேதுபதி உடன் அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். மிகக்குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமான கதைகளத்தில் வெளியான சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் 10 வருடங்களுக்குப் பிறகு தயாராகிக் கொண்டிருக்கிறது.

Also Read: வில்லனுக்கே பிளாஸ்பேக் வைத்து ஹிட் கொடுத்த 5 கேரக்டர்கள்.. கேங்ஸ்டர் ஆக உலா வந்த விக்ரம் வேதா

தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதை பார்த்த பலருக்கும் விஜய் சேதுபதி இல்லையே என்று ஆதங்கப்படுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சூது கவ்வும் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கப்பட்டது.

இதில் விஜய் சேதுபதி இல்லை என்பது மக்களுக்கு ஒரு புறம் ஏமாற்றத்தை கொடுத்திருந்தாலும், மிர்ச்சி சிவா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால் காமெடிக்கு கேரன்டி என ரசிகர்கள் நம்புகின்றனர். இவர் தொடர்ந்து நகைச்சுவையான கதை களங்கள் கொண்ட திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Also Read: இமேஜே போனாலும் துணிந்து நடித்த 5 நடிகர்கள்.. ஷில்பாவாக சொக்க வைத்த விஜய் சேதுபதி

இந்த படத்தை எஸ்.ஜே. அர்ஜுன் இயக்குகிறார். திருமுருகன் என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில் மிர்ச்சி சிவா உடன் ஹரிஷா, ரமேஷ் திலக், எம்.எஸ், பாஸ்கர், கருணாகரன், ராதா ரவி, யோக் ஜாப்பி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்திற்கு கார்த்திக்.கே.தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read: குரங்கு பட இயக்குனரின் கூட்டணியில் இணையும் விஜய் சேதுபதி.. அதிரடியாக வெளிவந்த 50வது படத்தின் அப்டேட்

Trending News