நாட்டுப்புறப் பாடல் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமியின் குடும்பமும், பாடகர் வேல்முருகனும் போட்டி போட்டு கொண்டு துதிபடியது தான் தற்போது முருக பக்தர்களை வேதனைக்குள்ளாக்கி சர்ச்சையாகியுள்ளது!
தேர்தலுக்கு முன்பே விஜயை புகழ்ந்துபாடி தன் இருப்பைக் காட்டிக்கொண்டவர் பாடகர் வேல்முருகன்.
புஷ்பவனம் குப்புசாமி தம்பதியரோ, தற்போது தவெக ஆட்சியில். அரசின் பொறுப்பு ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்நிலையில் இருதரப்புக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பாட்டுப்பாடும் வாய்ப்பு அறநிலையத்துறை மூலம் கிடைத்திருக்கிறது.
இதில் அறநிலையத்துறை அமைச்சரின் பங்களிப்பும் இருந்திருக்கக்கூடும்! பிறகென்ன, அவர்களையும் போற்றிப்பாடி பரிசில் பெற வேண்டுமல்லவா?
புஷ்பவனம் குப்புசாமியோ, தனக்கு பாட்டுப்பாடும் வாய்ப்புத்தந்த தமிழக முதல்வரின் கருணைக்கு மைக்கில் நன்றி சொல்லவும், அவரது மனைவியோ, அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி சொல்ல எடுத்துக்கூற, அந்த அமைச்சரின் கருணைக்கும் நன்றி சொல்கிறார்!.
அதோடு விடாமல், “தமிழக முதல்வரைப்போல் வேலெடுத்து சூரனை வதம் செய்த முருகன்” என்று பாடுகிறார்! அதாவது, முருகனே விஜயை பார்த்துத்தான் கற்றுக்கொண்டதாக துதி பாடுகிறார்! பாடகர் வேல்முருகனோ இவர்களையும் மிஞ்சும்விதமாக, முருகனுக்கு அரோகராவோடு, தமிழ்நாடு முதல்வருக்கும் அரோகரா, அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா என்று கோஷம் போட்டு, நீங்க எனக்கு முருகக்கடவுள் மாதிரி என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்!
இதில், வேல்முருகன் கொஞ்சம் உஷார், முதல்வரின் பெயரையும் சேர்த்துச்சொல்லியிருந்தால் அது இன்னும் சர்ச்சையாகியிருக்கும் என்பதால் தமிழக முதல்வருக்கு அரோகரா என்று மட்டும் சொல்லிவிட்டார்!
ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில், புஷ்பவனம் குப்புசாமி, ஜோசப் விஜய் வாழ்கவே என்று போற்றிப் பாடிவிட்டார்! இனி அடுத்த சூரசம்ஹார நிகழ்ச்சியில், கந்த சஷ்டி என்று சொல்லாமல், விஜய் சஷ்டி என்று சொன்னாலும் ஆச்சர்யமில்லை




