செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

நட்பு, துரோகம், பழிவாங்கல், விசுவாசத்தில் விஸ்வரூபம் எடுத்த சூரியின் கருடன்.. முழு விமர்சனம்

Garudan Movie Review: சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் கருடன் இன்று வெளியாகி உள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் கீழே குறிப்பிட்டுள்ள பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சசிகுமார்
உன்னி முகுந்தன்
சமுத்திரகனி
சமுத்திரக்கனி
வடிவுக்கரசி
Revathi Sharma
Roshini Haripriyan
R.V.Udayakumar
Dushyanth
Motta Rajendran
Bragida
யுவன் சங்கர் ராஜா – music
வெற்றிமாறன் – producer

ட்ரெய்லரிலேயே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருந்த கருடன் இப்போது நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் இந்த வருடத்தின் அடுத்த சம்பவம் என்றும் கொண்டாடி வருகின்றனர். இதன் விமர்சனத்தை இங்கு காணலாம்.

சிறுபிள்ளையிலிருந்து நண்பர்களாக இருக்கும் சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் பல தொழில்களை செய்து ஊரின் முக்கிய புள்ளியாக இருக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையில் சொக்கன் எனும் சூரி வருகிறார்.

அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் உன்னி முகுந்தன் அவரை தன்னுடனேயே வைத்துக் கொள்கிறார். ஊர் பேர் தெரியாத தனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த முதலாளிக்கு சூரி நாய் போல் விசுவாசத்தை காட்டுகிறார்.

எப்படி என்றால் சசிகுமார் தன் நண்பனை விளையாட்டாக அடித்தால் கூட சூரி தடுக்க வந்து விடுவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நிலம் நண்பர்களுக்குள் விரிசலை ஏற்படுத்துகிறது.

அதை கொஞ்சம் கொஞ்சமாக போலீசாக வரும் சமுத்திரகனி அமைச்சராக வரும் ஆர் வி உதயகுமார் இருவரும் பெரிதாக்குகின்றனர். இதனால் உன்னி முகுந்தன் மாறுவதும் சூரி விஸ்வரூபம் எடுப்பதும் தான் படத்தின் கதை.

கதையின் நாயகன் சூரி

இந்த மூவரை சுற்றி பின்னப்பட்ட கதையை இயக்குனர் சரியான பாதையில் கொண்டு சென்று பாராட்டுகளை அள்ளி இருக்கிறார். அதேபோல் சசிகுமார் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அவரைப் போலவே மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் நடிப்பும் மிகப்பெரும் பலம். இதில் கதையின் நாயகனாக வரும் சூரி ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்து விடுகிறார்.

காமெடி நடிகர் என்ற பிம்பத்தை அடித்து நொறுக்கி நான் ஹீரோ என காட்டி இருக்கிறார். இப்படத்திற்குப் பிறகு அவர் நிச்சயம் கதையின் நாயகனாக வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

அடுத்ததாக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, பாடல்கள் அனைத்தும் நிறைவாக இருக்கிறது. இதை தவிர்த்து படத்தில் மற்ற கதாபாத்திரங்களின் தேர்வும் அவர்களுடைய நடிப்பும் பொருத்தமாக உள்ளது.

கதையின் ஓட்டத்தில் சிறு சிறு தொய்வு இருந்தாலும் மொத்தத்தில் இந்த கருடனை தியேட்டரில் தாராளமாக கண்டு ரசிக்கலாம். அந்த வகையில் அரண்மனை 4 ஆடியன்ஸை கவர்ந்த நிலையில் கருடன் அதை ஓவர் டேக் செய்துள்ளது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.5/5

கதையின் நாயகனாக ஜெயித்தாரா சூரி.?

Trending News