வெறி பிடித்த மிருகமாக மாறிய சூரி.. மாஸ் ட்ரைலர்

Garudan Trailer: சூரி இப்போது முழு நேர ஹீரோவாக மாறிவிட்டார். விடுதலை படத்தை தொடர்ந்து தற்போது அவர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடித்துள்ள கருடன் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

இதன் ஆரம்பத்திலேயே நம்ம செய்ற தப்பை இயற்கையும் கடவுளும் நல்ல வழியில் கொண்டு போகும். ஏன்னா அது நம்ம தலைக்கு மேல கருடனா சுத்திக்கிட்டு இருக்கு என்ற வசனத்தோடு தொடங்குகிறது.

சூரியின் நடிப்பு

அதைத்தொடர்ந்து சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் ஆதி, கர்ணா என்ற கேரக்டரில் நண்பர்களாக வருகின்றனர். அதில் கர்ணாவின் விசுவாசியாக சூரி இருக்கிறார்.

அந்த விசுவாசத்திற்காக அவர் செய்யும் விஷயம் அவருக்கே பிரச்சனையாக மாறுகிறது. அதை தொடர்ந்து அவர் சந்திக்கும் ஒவ்வொன்றையும் மிரட்டல் காட்சிகளாக ட்ரெய்லரில் காட்டியுள்ளனர். அதில் சூரியின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டும். அந்த அளவுக்கு அவர் ஆக்ரோஷமான மற்றும் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இன்னும் எட்டு படத்துல நடிச்சிட்டு இருக்காரு,

  • இறைவன் மிகப்பெரியவன்
  • மாற்றம்
  • கருடன்
  • 8
  • விடுதலை பார்ட் 2
  • விக்ரம் சுகுமாரன் படம்
  • பார்த்தோம் பழகினோம்
  • கலக்குற மாப்ள

சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசைல வர வாழ்த்துக்கள்.