சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் குடும்பத் திருமண விழாவில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார்.
அங்கு சூரி, ஜேசன் சஞ்சய்க்குப் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்ததுடன், இருவரும் நீண்ட நேரம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிக்மா’ படத்தின் கதையைக் கேட்டபோதே, அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை சூரி வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், ஜேசன் சஞ்சய் இயக்குநராக மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் எனத் தனது ஆசையைத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தத் திடீர் சந்திப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து புதிய படத்தில் பணியாற்றப் போகிறார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்தக் கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்!




