Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சந்தானத்தை காலி பண்ணி சூரி ஆடிய வேட்டை.. ஒரு பக்கமா நவீன் சந்திரா வெட்டிய குழி

சந்தானத்தை காலி பண்ணி சூரி ஆடிய வேட்டை.. ஒரு பக்கமா நவீன் சந்திரா வெட்டிய குழி

சமீப காலமாக சின்ன படங்கள் வெளிவந்து பெரிய படங்களை காலி செய்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு டிராகன் படம் வெளிவந்து அஜித்தின் விடாமுயற்சியை காலி செய்தது. இப்பொழுது டூரிஸ்ட் ஃபேமிலி வெளிவந்து சூர்யாவின் ரெட்ரோ படத்தை கேள்விக்குறியாக்கியது. […]

சமீப காலமாக சின்ன படங்கள் வெளிவந்து பெரிய படங்களை காலி செய்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு டிராகன் படம் வெளிவந்து அஜித்தின் விடாமுயற்சியை காலி செய்தது. இப்பொழுது டூரிஸ்ட் ஃபேமிலி வெளிவந்து சூர்யாவின் ரெட்ரோ படத்தை கேள்விக்குறியாக்கியது.

இப்பொழுது நடிகர் சூரியின் மாமன் படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மற்றும் இந்த படம் 40 கோடிகள் வசூல் செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சூரி தான். இந்த படத்திற்கு உசுரை கொடுத்து ப்ரொமோஷன் செய்து வந்தார். அதற்கு கிடைத்த பலன் தான் இது.

சுமார் 8 கோடிகள் சம்பளம் வாங்கி வருகிறார் சூரி. சந்தானம் ஒரு படத்திற்கு 5 கோடிகள் வாங்குகிறார். சமீபகாலமாக சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படங்கள் சரியாக போவதில்லை. மொத்தமா சூரி ஹீரோவாக நடித்த ஆறு படங்களில் நான்கு படங்கள் சூப்பர் ஹிட்.

மாமன் படம் வெளிவந்து சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை காலி பண்ணிவிட்டது. அந்த படம் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் எல்லாம் தற்போது மாமன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப்போல் மற்றொரு சின்ன படமான லெவன் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குமார் 250 தியேட்டர்களுக்கு மேல் இந்த இரண்டு படங்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நவீன் சந்திரா நடித்துள்ளார். இந்த 2 படங்களும் வெளிவந்து சந்தானத்தின் படத்தை கேள்விக்குறியாகிவிட்டது. ஏ சென்டர்களை தவிர்த்து பி மற்றும் சி இரண்டிலும் மாமன் படம் சக்கபோடு போட்டு வருகிறது.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.