புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சூரி பயந்த மாதிரியே நடந்துவிட்டது.. இதுக்கு ஏன் என்கிட்ட வந்தீங்க வெற்றிமாறன்

வெற்றிமாறன் சூரியை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் படம் விடுதலை. இந்தப் படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்பதனால் நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்து தனது உடலமைப்பை மாற்றி இருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக தழுவி அசுரன் என்ற வெற்றிப் படத்தை உருவாக்கிய வெற்றிமாறன், மீண்டும் அதைப்போன்று ஒரு சிறுகதையை மையப்படுத்திதான் சூரி நடிக்கும் விடுதலை படத்தையும் இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஆரம்பத்தில் ஒன் லைன் ஸ்டோரி ஆக சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி கைதுயாகவும் நடித்திருப்பதாக ஒரு செய்திகள் வெளிவந்தன. அதன்பின் படம் ஜவ்வாக இழுத்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. ஒருபக்கம் விஜய்சேதுபதி பிசி, மறுபக்கம் கொரோனா பரவலால் என்று இந்த படம் கிட்டத்தட்ட நீண்ட நாட்கள் தள்ளிப்போனது.

கடைசியாக இந்த படத்திற்கு ஒரு 30, 40 நாட்களில் முடித்துவிடும் என்று என்றெல்லாம் பேசப்பட்டது. இப்பொழுது இந்தப் படத்தில் விஜய்சேதுபதி மட்டுமே கிட்டத்தட்ட 30 நாட்கள் நடிக்கவிருக்கிறார். இதற்கு முன்னர் சூரிக்கு ஒரு பயம் இருந்தது. இந்த படத்தில் யார் ஹீரோ என்று.

இப்பொழுது விஜய்சேதுபதி வேறு 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விஜய் சேதுபதிக்கு பிளாஷ்பேக் காட்சிகள் வேறு இருக்கிறது. ஒருவேளை படத்தில் அவர் ஹீரோ ஆகி விடுவாரோ என்று சூரி ஒருவிதமான பயத்தில் இருக்கிறார்.

ஏனென்றால் திரையில் யாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அவர்தானே ஹீரோ, அப்படி என்றால் விஜய் சேதுபதி தான் இந்த படத்தின் கதாநாயகனா, மறுபடியும் நான் சைடு ஆக்டரா என சூரி புலம்பித் தவிக்கிறாராம். இதற்கு எதற்கு என்னிடம் இந்தக் கதையை தூக்கி கொண்டு வந்தீர்கள் என்று வெற்றி மாறனிடம் சூரி சலித்துக் கொள்கிறாராம்.

Trending News