செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சர்வதேச அளவில் கலக்கிய கொட்டுக்காளி.. சூரிக்கு ஹட்ரிக் வெற்றியா.? முழு விமர்சனம்

Kottukkaali Movie Review: சூரி இப்போது கதையின் நாயகனாக படத்திற்கு படம் கலக்கிக் கொண்டிருக்கிறார். விடுதலை, கருடன் வரிசையில் அவர் நடித்துள்ள கொட்டுக்காளி இன்று வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இப்படத்தை கூழாங்கல் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.

கதை கரு

சர்வதேச விழாவில் விருதுகளை வென்ற இப்படம் சூரிக்கு ஹட்ரிக் வெற்றியா என்பதை விமர்சனத்தின் மூலம் காண்போம். பாண்டியாக வரும் சூரிக்கும் அவருடைய முறை பெண் மீனவான அன்னா பென்னுக்கும் திருமணம் முடிவாகிறது.

ஆனால் யாரிடமும் பேசாமல் அமைதியாக வெறித்த பார்வையுடன் இருக்கும் அவருக்கு பேய் பிடித்திருப்பதாக குடும்பமே நம்புகிறது. அதைத் தொடர்ந்து பேய் ஓட்ட செல்கிறார்கள். அதன் பிறகு நடந்தது என்ன? உண்மையிலேயே அவருக்கு பேய் பிடித்ததா? சூரி உடன் திருமணம் நடந்ததா? என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

நிறை குறைகள்

இசை இல்லாமல் கதையோட்டத்தில் கிடைக்கும் சத்தங்களை வைத்து படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குனர். இந்த புது முயற்சியை நிச்சயம் பாராட்ட வேண்டும். அதேபோல் ஆணாதிக்க உலகில் பெண்களின் நிலைப்பாடு, இப்போது இருக்கும் சமூகத்தின் நிலை ஆகியவற்றையும் உணர்வோடு சொல்லி இருக்கிறார்.

இதில் பாண்டியாக வரும் சூரி நடிப்பில் மெருகேறி இருக்கிறார். தொண்டை கட்டிய குரலில் அவர் பேசுவதும், ஒரு காட்சியில் ஹீரோயின் முதல் குடும்பத்தினர் அனைவரையும் அடித்து வெளுப்பதும் என கைதேர்ந்த நடிகராக நம்மை வியக்க வைக்கிறார்.

அவருக்கு அடுத்தபடியாக வசனமே இல்லாமல் முகபாவனையில் ஸ்கோர் செய்திருக்கிறார் அன்னா பென். படத்தில் அவருக்கு ஒரே ஒரு வசனம் தான் வருகிறது. மற்ற காட்சிகளில் எல்லாம் தன்னை சுற்றி நடக்கும் அநியாயத்திற்கு எதிரான அமைதிப் போராட்டமாக தான் இருக்கிறது.

பிடிக்காத திருமணத்தை பிடிவாதமாக மறுப்பது, சூரியிடம் அடிவாங்கும் காட்சி என கைத்தட்டலை அள்ளுகிறார். அதேபோல் மற்ற துணை கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இப்படியாக படத்தில் நாம் பாராட்ட வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. அதை தாண்டி சில காட்சிகள் நீளமாகவும் சில காட்சிகள் இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாமோ என்ற உணர்வை கொடுக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டி கொட்டுக்காளி அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் தான்.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

சூரி, சிவகார்த்திகேயன் கூட்டணி வெற்றியா.?

Trending News