Simbu and Soori: ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் தொட்டதெல்லாம் தொடங்காது என்று சொல்வார்கள். அது யாருக்கு பொருந்தோ இல்லையோ நடிகர் சிம்புவுக்கு நன்றாக பொருந்தி வருகிறது. ஆரம்பத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக நுழைந்த சிம்பு அடுத்தடுத்து படங்களில் மூலம் ரொமான்டிக் ஹீரோவாகவும், ஸ்டைலிஷ் நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அந்த சமயத்தில் இவருக்கும் தனுஷுக்கும் நடந்த யுத்தத்தில் ஒரு படி முன்னேறி சிம்பு அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஆனால் சிம்புவின் துடுக்கான பேச்சும், அசால்ட்டுத்தனமான செயல்களாலும் வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பல சர்ச்சைக்குள் சிக்கிவிட்டார். இதிலிருந்து மீண்டு வர முடியாமல் இவருடைய இமேஜை கெடுத்துக் கொண்டு படங்களில் நடிக்க முடியாமல் தவித்து வந்தார்.
மின்னல் வேகத்தில் சிம்புவை ஓவர் டேக் பண்ணிய சூரி
போதாக்குறைக்கு இவரை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களை அலட்சியப்படுத்தும் விதமாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு இஷ்டத்துக்கு வருகிறது. கால் சீட் சரியாக கொடுக்காமல் இழுத்து அடித்தது போன்ற பல ஆர்ப்பாட்டங்களை பண்ணி இவர் தக்க வைத்திருந்த இடத்தை சுக்குநூறாக உடைத்து விட்டார். இந்நிலையில் வந்த புது புது ஹீரோக்கள் இவரை தாண்டி ஒரு படி முன்னேறிப் போய்விட்டார்கள்.
அதே மாதிரி தான் தற்போது சூரியும் சிம்புவின் இடத்தை பிடித்து விட்டார். ஆரம்பத்தில் சூரி ஒரு சில படங்களில் முகத்தை காட்டி வந்த பொழுது, அடுத்தடுத்து காமெடி நடிகராக பல வாய்ப்புகளைப் பெற்று இவருக்கு என்று ரசிகர்கள் மனதில் ஒரு முத்திரையை பதித்து விட்டார். அது மட்டும் இல்லாமல் கடந்த வருடம் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கூட்டணியில் நடித்த விடுதலை படத்தின் மூலம் சூரி காமெடி நடிகர் கிடையாது, ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு கச்சிதமான ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
அதோடு சும்மா இல்லாமல் சமீபத்தில் வெளிவந்த கருடன் படத்திலும் சொக்கனாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து ஜெயித்துக் காட்டி விட்டார். இதனைத் தொடர்ந்து கொட்டுக்காளி படமும், விடுதலை இரண்டாம் பாகத்திலும் கலக்கிக் கொண்டு வருகிறார். இப்படி ஹீரோவாக அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்று வரும் சூரி, B கிரேடு வாங்கி உள்ளார். தற்போது இதே இடத்தில் தான் சிம்புவும் இருக்கிறார்.
என்னதான் 25 வருடங்களுக்கு முன் ஹீரோவாக அடி எடுத்து வைத்தாலும் இவரை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு சூரி ரெண்டே படத்தின் மூலம் சிம்புவை ஓரம் கட்டி விட்டார். தற்போது இந்த விஷயம் சிம்புவுக்கு வருத்தமாக இருக்கிறதோ இல்லையோ இவருடைய அப்பா டிஆர் ராஜேந்திரனுக்கு மிகப்பெரிய ஆத்திரத்தை அளித்திருக்கிறது.
அது எப்படி என்னுடைய பையனுக்கு B கிரேடு கொடுக்கலாம் என்று நியாயம் கேட்கும் வகையில் கையில் சிலம்பை எடுத்துக்கொண்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மன்றாடி வருகிறார். சிம்பு இன்னொரு பக்கம் எப்படியாவது A கிரேடுக்கு போக வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் அது வெறும் முயற்சியாக இல்லாமல் விடாமுயற்சியுடன் டெடிகேஷனாக போராடி வந்தால் நிச்சயம் சிம்புவுக்கு வெற்றி கிடைக்கும்.