திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விடுதலையால் சூரிக்கு அடித்த ஜாக்பாட்.. குமரேசனின் புதிய காரின் விலை இத்தனை கோடியா!

பொதுவாகவே எல்லோருடைய வாழ்க்கையிலும் திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக அவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு விஷயங்களை சந்தித்து இருப்பார்கள். அந்த சமயத்தில் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு முயற்சி செய்து வந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் சூரி. இவர் என்னதான் காமெடி நடிகராக வந்திருந்தாலும் அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

விடாமுயற்சியுடன் எந்த விஷயமும் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை போல காமெடி நடிகராக இருந்த சூரிக்கு விடுதலை படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் எந்த மாதிரி வெற்றி என்றால் இவர்தான் இந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் என்று சொல்லும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை கொடுத்திருக்கிறார்.

Also read: யாருமே அறியாத சூரியின் முதல் 5 படங்கள்.. உண்மையான உழைப்பால் உயர்ந்த முருகேசன்

இதற்கு கிடைத்த வரவேற்பே வைத்து இவருக்கு தொடர்ந்து ஹீரோவாக பட வாய்ப்புகள் தேடி வந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் இவர் நான் நடித்தால் இனிமேல் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொல்லாமல் கதைப்படி என்னுடைய கேரக்டர் நல்லா இருந்தால் நான் மறுபடியும் காமெடியனாகவும் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக மாறிவிட்டார். தற்போது ரியல் லைஃப்லும் ஹீரோவாக மாறி இருக்கிறார் என்று சொல்லலாம். அதாவது பொதுவாக யாராக இருந்தாலும் அவர்களுக்கு கெத்தாக இருப்பது அவர் வைத்திருக்கும் கார் தான். அந்த அளவுக்கு பந்தாவாக கார் வாங்குவதில் அனைவரும் ஆர்வம் காட்டுவார்கள்.

Also read: விடுதலை படத்திற்கு பிறகு சூரிக்கு இவ்வளவு துணிச்சலா.. அடுத்த பட அப்டேட்டை கொடுத்த குமரேசன்

அதேபோல தான் தற்போது சூரியும் அந்த விஷயத்தில் இறங்கிவிட்டார். அதாவது ஹீரோவாக ஆகிவிட்டால் கெத்தாக இருக்க வேண்டும் என்று BMW காரை 1.5 கோடிக்கு வாங்கி இருக்கிறார். இதுவே இவரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு போகிறது. அடுத்ததாக இவர் வாங்கிய காருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் சூரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இது உன்னுடைய வெற்றிக்கு கிடைத்த பரிசு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

இதே போல் தொடர்ந்து நிறைய படங்களில் ஹீரோவாகவும் நல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார். தற்போது இவருடைய விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்று இவருடைய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: சிவகார்த்திகேயன் பட வாய்ப்பை தட்டி தூக்கிய விடுதலை சூரி.. அடுத்த படம் இயக்குனர் யார் தெரியுமா?

Trending News