வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அரண்மனை 4-ஐ முந்தியதா சூரியின் கருடன்.? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்

Garudan Collection: இந்த வருட ஆரம்பத்தில் இருந்து பெரிய அளவில் வெற்றி படங்கள் எதுவும் தமிழில் வரவில்லை. டாப் ஹீரோக்களின் படங்கள் கூட வசூலில் மொக்கை வாங்கியது.

அந்த சமயத்தில் தான் கடந்த மாதம் சுந்தர் சி யின் அரண்மனை 4 வெளியானது. சுமாராக எதிர்பார்க்கப்பட்ட அப்படம் முதல் நாளில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களின் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்தது.

Soori
Sasikmar
Unni Mugundan
Samuthrakani

அதன்படி இந்த வருடத்தின் முதல் பிளாக் பாஸ்டர் படம் என்ற பெருமையை பெற்றுள்ள அரண்மனை 4 தற்போது 100 கோடியை தாண்டி வசூலித்து இருக்கிறது. அதை அடுத்து சூரியின் கருடன் படத்தை தான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

கருடன் முதல் நாள் வசூல்

அதற்கு கொஞ்சம் கூட குறை வைக்காமல் நேற்று வெளியான அப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதில் சூரியின் நடிப்பு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

அதன்படி தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் 3 கோடியாக உள்ளது. அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூல் 4.75 கோடியாகும். அதை வைத்து பார்க்கும் போது கருடன் வசூல் கொஞ்சம் குறைவு தான்.

Sundar C
Tamannaah
Raashii Kannah
Yogibabu
Kovai Sarala

ஆனால் அடுத்தடுத்து விடுமுறை நாட்களாக இருப்பதால் நிச்சயம் படத்தின் வசூலில் முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நேற்று காலை காட்சிக்கு தியேட்டர்களில் 20% மேல் கூட்டம் நிறைந்திருந்தது.

அதைத்தொடர்ந்து மதிய காட்சியில் அது 30 சதவீதமாக உயர்ந்தது. அடுத்ததாக மாலை காட்சியில் 31% மற்றும் இரவு காட்சி 49 சதவீதமாக இருந்தது. இப்படி ரசிகர்களின் வரவு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த நிலையில் இனி வரும் நாட்களில் கருடன் வசூல் வேட்டை நடத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

வசூல் வேட்டையாடும் கருடன்

Trending News