ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கோடிகளை வாரி சுருட்டும் சூரியின் கருடன்.. மூன்றே நாளில் அள்ளிய வசூல் நிலவரம்

Garudan Collection: சோசியல் மீடியாவை திறந்தாலே இப்போது சூரியின் கருடன் படம் பற்றிய அலப்பறை தான் அதிகமாக இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

சசிகுமார், உன்னி முகுந்தன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ள நிலையில் படத்தைப் பார்க்க ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த கூட்டம் சராசரியை விட அதிகமாகவே இருந்தது.

அதைத்தொடர்ந்து படத்தின் வசூலும் ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் கருடன் முதல் நாளில் 4 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தி இருந்தது.

கருடன் மூன்று நாள் வசூல்

இரண்டாம் நாளில் 4.5 கோடியும் மூன்றாவது நாளான நேற்று 6.25 கோடிகளையும் தட்டி தூக்கி இருக்கிறது. இதன் மூலம் மூன்றே நாளில் இப்படத்தின் வசூல் 15 கோடியை நெருங்கி விட்டது.

Soori
Sasikumar
Unni Mugundan
Samuthrakani
RV Uthayakumar
Yuvan Shankar Raja(Music)

இதை படக்குழுவினர் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். விடுதலை படத்திற்கு பிறகு கதையின் நாயகனாக நடித்துள்ள சூரி இதில் சொக்கனாக மிரட்டி விட்டார்.

இதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். அதேபோல் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் படத்தில் இன்னொரு ஹீரோவாக இருக்கிறது. அது மட்டும் இன்றி ஷிவதா, சமுத்திரகனி, ஆர் வி உதயகுமார் என எல்லா கதாபாத்திரங்களும் தங்களுடைய சிறப்பை கொடுத்துள்ளனர்.

இப்படியாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள கருடன் இந்த வாரமும் வசூல் வேட்டையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சூரி காமெடியன் என்ற அடையாளத்தை தாண்டி ஹீரோவாக நின்றுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸை கலக்கும் கருடன்

Trending News