வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி வென்றதா.? கொட்டுக்காளி இரண்டாவது நாள் கலெக்ஷன்

Soori : வினோத் ராஜா இயக்கத்தில் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது கொட்டுக்காளி. சூரி கதாநாயகனாக நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகி வரும் நிலையில் இப்போது கொட்டுக்காளி படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

இந்த படத்தை நடிகர் மற்றும் சூரியின் நண்பருமான சிவகார்த்திகேயன் தனது எஸ் கே ப்ரொடக்சன் மூலம் தயாரித்திருந்தார். ஒரு நாளில் நடக்கும் கதையை கொண்ட கொட்டுக்காளி படத்திற்கு ரசிகர்கள் ஏக போக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

மிஷ்கின் தொடங்கி பாலா, வெற்றிமாறன் என பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருந்தனர். மேலும் கொட்டுக்காளி படத்துடன் மாரி செல்வராஜின் வாழை படமும் வெளியாகி நல்ல வசூலை குவித்து வருகிறது.

கொட்டக்காளி இரண்டாவது நாள் வசூல்

இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் வசூல் விபரத்தை இப்போது பார்க்கலாம். படத்திற்கு நல்ல ப்ரோமோஷன் செய்த நிலையில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதன்படி முதல் நாளே கிட்டத்தட்ட 40 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.

நேற்றைய தினம் சனிக்கிழமை இரண்டாம் நாள் 33 லட்சம் வசூல் செய்தது. இதைத்தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று தெரிகிறது. அதேபோல் திங்கட்கிழமையும் கோகுலாஷ்டமியை முன்னிட்டு விடுமுறை என்பதால் இந்த தொடர் விடுமுறையை முன்னிட்டு படம் வெளியானது.

ஆகையால் இந்த நான்கு நாட்களில் ஒரு நல்ல வசூலை கொட்டுக்காளி படம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொட்டுக்காளி வெற்றியைத் தொடர்ந்து சூரியின் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சம்பவம் செய்யும் சூரி

Trending News