புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீண்டும் வரும் சூது கவ்வும் பார்ட் 2.. ஆனா ஹீரோ விஜய்சேதுபதி இல்ல!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். பல வருடங்களாக சினிமாவில் வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர் இவர். தற்போது தேடி வரும் வாய்ப்புகளை கூட ஒதுக்கும் அளவுக்கு பிஸியான கால் ஷுட்டுடன் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவருடைய வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் இவர் தொடக்க காலத்தில் தேர்வு செய்து நடித்த படங்கள்தான்.

தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி அடுத்தடுத்து, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய் போன்ற வித்தியாசமான கதை கலங்களில் நடித்து ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றார். மேலும் தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவும் தன்னுடைய இன்னொரு பரிமாணத்தை காட்டி வருகிறார்.

Also Read:ஒரு வழியா தமிழுக்கு வந்த அக்கட தேசத்து பைங்கிளி.. விஜய் சேதுபதி மகளுக்கு அடித்த ஜாக்பாட்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் சூது கவ்வும். நாளைய இயக்குனர் என்னும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த நலன் குமாரசாமி உடன் இணைந்து விஜய் சேதுபதி பணியாற்றிய இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனுடைய இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வந்திருக்கிறது. ஆனால் இது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் செய்தியாக அமையாமல் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. இதற்கு காரணம் சூது கவ்வும் படத்தை ரசிகர்கள் விரும்பியதற்கு முக்கிய காரணமே விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பு தான்.

Also Read:சூப்பர் ஹிட் ரீமேக் படத்தில் ஹீரோவாக விஜய்யின் வாரிசு.. அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஒரே எதிரி தான்

ஆனால் இந்த பார்ட் 2வில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கப் போவது இல்லையாம். மேலும் படத்தை இயக்கப் போவதும் நலன் குமாரசாமி இல்லை. இயக்குனர் அர்ஜுன் என்பவர் இந்த படத்தை இயக்க இருக்கிறார். சென்னை 28, தமிழ் படம் போன்ற படங்களில் நடித்த மிர்ச்சி சிவா இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

நடிகர் மிர்ச்சி சிவாவிற்கு தற்போது மார்க்கெட் இல்லை. அதே போன்று சூது கவ்வும் போன்ற சீரியஸ் படங்களில் சிவா நடித்தால் கண்டிப்பாக எடுபடாது. சிவாவுக்கு ஏற்ற மாதிரி படத்தின் கதையை மாற்றினால் கண்டிப்பாக ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனால் சூது கவ்வும் பார்ட் 2 வேண்டவே வேண்டாம் என்று தற்போது ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.

Also Read:விஜய் சேதுபதியை இயக்க வரும் மாஸ் ஹீரோவின் வாரிசு.. படு சீக்ரெட்டாக நடக்கும் வேலை

Trending News