வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சௌந்தர்யாவின் முன்னாள் காதலன் வரவு.. அதிரடி திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் சௌந்தர்யாவுக்கு அடிக்கடி தெரியாத நபரிடமிருந்து மெசேஜ்கள் வந்தது. இந்நிலையில் விக்ரம் என்ற புதிய கதாபாத்திரத்தை பாரதிகண்ணம்மா அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்தான் சௌந்தர்யாவுக்கு மெசேஜ்கள் அனுப்பியுள்ளார்.

சௌந்தர்யா, அவரது கணவர், விக்ரம் மூவரும் ஒன்றாகப் படித்தவர்கள். இந்நிலையில் விக்ரம் சௌந்தர்யாவை காதலித்துள்ளார் அதற்கு முன்னதாகவே சௌந்தர்யாவின் கணவர் முந்திக்கொண்டு சௌந்தர்யாவிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார். இதை அனைத்தையும் குடும்பத்துடன் பகிர்ந்துகொண்டு கலகலப்பாக பேசி வருகிறார்கள்.

அப்போது ஆட்டம் பாட்டம் என பாரதி வீடு களைகட்டியுள்ளது. இந்நிலையில் பாரதி சமூக சேவை செய்வதில் ஆர்வம் கொண்டவன் என விக்ரமிடம் பாரதி தந்தை கூறுகிறார். மேலும் ஒரு மருத்துவமனையை விலைக்கு வாங்கி அங்கு கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறான் என பாரதியைப் பற்றி பெருமையாக கூறுகிறார்.

இதைக் கேட்ட விக்ரம் நானும் இது மாதிரி சில உதவிகள் செய்ய வேண்டும் என சொல்ல, பாரதி ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து பாருங்கள் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என கூறுகிறார். மறுபக்கம் வெண்பா வக்கீலை சந்திக்கிறார். அப்போது பாரதி, கண்ணம்மா இருவரின் விவாகரத்து வழக்கு மிக விரைவில் வர உள்ளதாக கூறுகிறார்.

மேலும், பாரதி இதில் உறுதியாக இருக்க வேண்டும் என வக்கீல் கூறுகிறார். உடனே வெண்பா பாரதியை சந்திப்பதற்காக ஹாஸ்பிடல் செல்கிறார். ஆனால் அங்க மீட்டிங்கில் இருக்கும் பாரதி வெண்பாவின் பேச்சை காது கொடுத்து கூட கேட்காமல் இருக்கிறார். இதைப்பார்த்து வெண்பா ஆத்திரம் அடைகிறார்.

இந்நிலையில் பாரதிகண்ணம்மா தொடரில் விக்ரமின் புதுவரவால் பல திருப்பங்கள் வரக் காத்திருக்கிறது. அதுவும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் விக்ரம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெண்பாவிற்கு ஒரு போன் கால் அடிக்கடி வருகிறது. அது யார் என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ளது.

Trending News