வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

உன் EX-புருஷனை வெறுப்பேத்த, என் புருஷன் தான் கிடைத்தானா.. ஐஸ்வர்யா மீது கடுப்பான சௌந்தர்யா

விவாகரத்துக்குப் பின்னர் இயக்குனரும்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தன்னுடைய திரைப்படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். தமிழில் இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சில காலம் சினிமாவில் இயக்குவதை விட்டு விலகி இருந்த ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் இறங்கி திரைப்படங்களை இயக்க திட்டமிட்டு வருகிறார்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில் தங்களுடைய 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக விவாகரத்து அறிக்கைகளை இருவரும் தங்களது வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.

இதனிடையே நடிகர் தனுஷ் தற்போது பாலிவுட்,டோலிவுட்,ஹாலிவுட் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதே சமயத்தில் ஐஸ்வர்யா தன்னுடைய இணையதள பக்கத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்ற பெயரை வைத்து தற்போது திரைப்படங்களை இயக்குவதில் அதிகமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.

இதனிடையே தன்னுடைய அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா.
சமீபத்தில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன கலைஞர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்சை சந்தித்து தன்னுடைய புதிய திரைப்படத்தின் கதையை அவரிடம் கூறினார். இது குறித்து பேசிய ராகவா லாரன்ஸ் என் தங்கைக்கு நான் என்ன உதவி வேண்டுமானாலும் செய்வேன். ஐஸ்வர்யா எப்போதுமே என்னுடைய அன்பான தங்கை தான் என பெருமிதமாக தெரிவித்தார்.

இதனிடையே ராகவாலாரன்ஸின் தயாரிப்பில் ஐஸ்வர்யா தற்போது ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து உரையாடிய புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கத்தில் ஐஸ்வர்யா வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இளையராஜாவின் இசையில் அடுத்த திரைப்படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் இயக்கவுள்ள திரைப்படத்தின் கதாநாயகன் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் தங்கையான சௌந்தர்யாவின் கணவர் விசாகனை கதாநாயகனாக ஐஸ்வர்யா தேர்வு செய்துள்ளார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஐஸ்வர்யா தனது முன்னாள் கணவரான தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கிய நிலையில் தற்போது தன் தங்கை சௌந்தர்யாவின் இரண்டாவது கணவரான விசாகனை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். பிரபல தொழிலதிபரான விசாகன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான வஞ்சகர் உலகம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குனர் குரு சோமசுந்தரம் இயக்கத்தில் சாம்.சி.எஸ் இசையில் வெளியான இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விசாகன் நடித்து அசத்தியிருப்பார்.

இதனிடையே ஐஸ்வர்யாவின் அடுத்த படத்திற்கான கதாநாயகன் சௌந்தர்யாவின் கணவரான விசாகன் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் தனது முன்னாள் கணவரான தனுஷை கடுப்பேத்துவதற்காகவே ஐஸ்வர்யா இப்படி ஒரு திட்டத்தில் இறங்கியுள்ளார் என்று திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த சௌந்தர்யா,நீ வெறுப்பேற்ற என் கணவனாக கிடைத்தான் என்று தன் அக்காவான ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் உள்ளாராம். ஏற்கனவே ரஜினிகாந்திற்கு பல தலைவலிகள் இருக்கும் நிலையில், தற்போது அக்கா தங்கையின் சண்டையும் சேர்ந்து ஒரு வலி ஆகி வருகிறார்.

Trending News