ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

வெண்பா கன்னத்தை பதம் பார்த்த சௌந்தர்யா.. அடிதடியில் இறங்கிய கண்ணம்மா மாமியார்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் கணவன் மனைவியான பாரதி-கண்ணம்மா இருவருக்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தி 10 வருடங்களாக பிரிந்து வாழ விடாமல் வில்லி வெண்பா வைத்திருக்கிறார்.

இதற்கிடையில் பாரதியின் மனதை மாற்றி எப்படியாவது அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என வெண்பா நினைத்தாலும், அது மட்டும் நடந்த பாடில்லை. ஒரு கட்டத்தில் வெண்பாவின் அம்மா அமெரிக்காவில் இருந்து அவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்திருக்கிறார்.

ரோகித் என்ற மாப்பிள்ளையும் பார்த்து வைத்திருக்கிறார். இது ஒருபுறமிருக்க கண்ணம்மாவின் பிரசவத்தின் போது அவருக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்த வெண்பாவின் சதி செயல் தற்போது கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதை கேட்டதும் தாங்க முடியாத சௌந்தர்யா, ஷாப்பிங் செய்துகொண்டிருந்த வெண்பாவை பொது இடம் என்று கூட பார்க்காமல் கன்னத்தை அறைந்து கன்னத்தை வீங்க வைத்திருக்கிறார். அதன் பிறகு வெண்பாவின் வீட்டிற்கு சென்று அவருடைய அம்மாவிடம் திருமணத்தை வெகு சீக்கிரம் ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று நாசூக்காக குத்தி விட்டிருக்கிறார்.

உடனே வெண்பாவின் அம்மாவும் வெண்பாவிற்கு சீக்கிரம் நிச்சயதார்த்தத்தை நடத்த ஏற்பாடு செய்கிறார். முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் பயங்கர வில்லியாக காட்டப்பட்டு கொண்டிருந்த வெண்பா கடந்த சில மாதங்களாகவே டம்மி கேரக்டராகவே தெரிகிறார்.

அதுமட்டுமின்றி தற்போது சௌந்தர்யாவும் வெண்பாவின் கன்னத்தை பதம் பார்த்திருப்பது மற்றும் அடுத்தடுத்து சஸ்பென்ஸ்களும் இந்த சீரியலில் உடைக்கப்படுவதாலும் பாரதிகண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

Trending News