திறமையான நடிப்பிற்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு அங்கீகாரம் உண்டு. அப்படி ஒரு சில நடிகைகள் மட்டும் தான் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. அப்படி சாவித்திரி நடித்த கதாபாத்திரங்களும், படங்களும் இன்று வரை ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
மேலும் தற்போது இருக்கும் நடிகைகள், தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினால் உடனே அந்த நடிகையுடன் பணியாற்றிய சக நடிகர்கள் சாவித்திரி அளவிற்கு நடித்துள்ளதாக கூறுவார்கள். உதாரணத்திற்கு கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியாக நடித்திருப்பார்.
அந்த அளவிற்கு நேர்த்தியான நடிப்பு வெளிப்படுத்தியுள்ளார். சினிமா துறையில் இருக்கும் சில நடிகைகள் கூட சாவித்திரியை போல் நடிக்க வேண்டும் என கூறும் அளவிற்கு தனது நடிப்புத் திறமையை நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.
அப்படி ஒரு நேரத்தில் , தமிழ் சினிமாவில் சௌந்தர்யா ஒரு சில படங்களில் நடித்துள்ளார். உதாரணத்திற்கு படையப்பா, சொக்கத்தங்கம் மற்றும் அருணாச்சலம் போன்ற படங்கள் நடித்துள்ளார். தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் சவுந்தர்யாவின் நடிப்பு இப்படங்களுக்கு ஒரு பக்க பலமாகவே அமைந்தது.
மறுபக்கம் திரும்பி பார்த்தால் சௌந்தர்யா அப்படியே தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். மேலும் பல இயக்குனர்களும் சௌந்தர்யா நடித்தால் படம் பெரிய அளவில் வெற்றிபெறும் என்பதற்காகவே பல முன்னணி நடிகர்களின் படங்களில் சௌந்தர்யாவை நடிக்க வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 10 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அப்போது சௌந்தர்யா அடுத்து சாவித்ரி எனும் கூறுமளவிற்கு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்துள்ளார்.
மேலும் பல நடிகைகளுக்கும் சாவித்திரி போல் படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் சாவித்திரிக்கு கிடைத்த பெயர் தற்போது வரை எந்த ஒரு நடிகைக்கும் கிடைக்கவில்லை. மேலும் சாவித்திரியின் இடத்தை நிரப்ப அவரால் மட்டுமே முடியும் என்று இன்று வரை யாரும் கூறியதில்லை. தற்போது வரை பல நடிகைகளும் சாவித்திரியின் இடத்தை பிடிப்பதற்கு போராடி வருகின்றனர்.