வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சௌந்தர்யாவை கார்னர் பண்ணி பலியாடாக சிக்கிய டம்மி பீஸ்.. இந்த வாரம் வெளியே போகப் போகும் சவுண்ட் பார்ட்டி

Bigg Boss 8: பொதுவாக இதுவரை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் எல்லோரும் ஒற்றுமையாக பேசிக்கொண்டு ஒரு கலகலப்பான விளையாட்டை நோக்கி போவார்கள். ஆனால் இந்த சீசனில் முதல் நாளிலிருந்து சண்டை சச்சரவுகள் போட்டி பொறாமை என ஆரம்பிக்கப்பட்டு ஒருத்தரை ஒருத்தர் காலி பண்ண சீக்ரட்டாக பிளான் பண்ணி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆண்கள் அணி ஏதாவது பிளான் பண்ணி மக்களை என்டர்டைன்மென்ட் பண்ண வேண்டும் என்று ரகசியமான ஒரு டாஸ்க்கை செய்தார்கள். அந்த வகையில் ரஞ்சித்துக்கும் ரவீந்தருக்கும் சண்டை வருவது போல் ஒரு சீன் கிரியேட் பண்ணி அதை வெற்றிகரமாக பெண்கள் அணியை நம்ப வைத்து விளையாண்டு முடித்து விட்டார்கள்.

இதற்கு இடையில் அவ்வப்போது ஜாக்குலின் மற்றும் சுனிதா மறைமுகமாக முட்டிக்கொள்கிறார்கள். அதிலும் சுனிதா பக்கத்தில் யார் வந்து பேசினாலும் அவர்களிடம் ஜாக்குலினை பற்றி தவறாக ஒரு கருத்தை சொல்லி அவர்கள் மனதிலும் ஜாக்லின் இப்படிப்பட்டவர் தான் என்பதற்கு ஏற்ப சில கருத்துக்களை திணித்து விடுகிறார்.

அதே மாதிரி ஜாக்லினும் தன்னுடைய தனித்துவம் தெரிய வேண்டும் என்பதற்காக சின்ன விஷயத்தை பெரிசாக பேசி ஒரு கூட்டு சேர்ந்து மக்களின் கவனத்தை பெற நினைக்கிறார். இதனை தொடர்ந்து சௌந்தர்யா எந்த விஷயத்துக்கு வாய் திறந்து பேசணும் எப்படி பேச வேண்டும் என்று சில யுக்திகளை பாலோ பண்ணி வருகிறார்.

ஆனால் பலருக்கும் சௌந்தர்யா சும்மா வெத்து வெட்டாக இருப்பது போல் தெரிகிறது. அதனால் தான் சௌந்தர்யா ஒரு விஷயத்தை பற்றி டிஸ்கஸ் பண்ணும் பொழுது அர்னவ் அதில் மூக்க நுழைத்து சௌந்தர்யாவை காலி பண்ண நினைக்கிறார். ஆனால் சௌந்தர்யா சும்மா உங்களை மாதிரி எல்லாத்துக்கும் கத்தி பேசி சண்டையே பெருசாக்க விரும்ப மாட்டேன்.

எதற்காக குரல் கொடுக்கணும் எப்போது பேச வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று அவருடைய கருத்தை சொல்கிறார். அப்பொழுது சுனிதா உங்களுக்கு ஒரு தெளிவான பேச்சைக் கொடுக்க தெரியாதா என்று சௌந்தர்யாவை மடக்குகிறார். இப்படி ஒவ்வொருவரும் சௌந்தர்யாவை கார்னர் பண்ணி எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று பிளான் பண்ணி வருகிறார்கள்.

அந்த வகையில் அர்னவ் பிளான் பண்ணியதில் அவரே பலியாடாக சிக்கப் போகிறார். ஏனென்றால் தற்போது வரை சௌந்தர்யாவுக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அதிகப்படியான ஓட்டும் சௌந்தர்யாவுக்கு தான் கிடைத்திருக்கிறது. ஆனால் இது எதுவும் தெரியாத டம்மி பீஸ் ஆக அர்னவ் மற்றும் அக்ஷிதா இருவரும் சௌந்தர்யா வெளியே போவார் என்று எலிமினேட் செய்திருக்கிறார்கள்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கும் மக்கள் சவுந்தர்யாவுக்கு ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு தயாராகி விட்டார்கள். இந்த சூழ்நிலையில் இந்த வாரம் வெளியே போவதற்கு அதிகப்படியான வாய்ப்பு ஜாக்குலீனுக்கு இருக்கிறது. ஏன் என்றால் எல்லா விஷயத்துக்கும் கத்தி பேசினால் ஜெயித்து விடலாம் என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் விளையாடி வருகிறார். ஆனால் அதுவே இவருக்கு ஒரு நெகட்டிவ் பேரை கொடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் இவர்தான் வெளியே போவதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News