சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஜெஃப்ரியை விட மோசமாக நடந்து கொண்ட சௌந்தர்யா.. அடிப்பட்டு வந்திருக்கும் ராணவிடம் மல்லுக்கட்டும் சரோஜா

Bigg Boss Tamil 8 Jeffery and Ranav: சண்டைனு வந்துட்டா சட்ட கிளிருது சகஜம் தான், ஆனால் அதற்காக உசுருக்கு உசுராக கேட்பது ரொம்பவே மிருகத்தனமான விஷயம். அதை தற்போது ஜெஃப்ரி மூலம் ராணவ் அனுபவித்து இருக்கிறார். அதாவது இந்த வாரத்திற்கான டாஸ்க் ஆரம்பித்த நிலையில் பவித்ரா, அவருடைய கல்லை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜெஃப்ரி மற்றும் அன்சிதா விளையாடி வருகிறார்கள்.

ஆனால் அதே நேரத்தில் அந்தக் கல்லை பிடுங்க வேண்டும் என்பதற்காக ராணவ், பவித்ரா பக்கத்தில் போகிறார். இதை தடுக்கும் பொருட்டாக ஜெஃப்ரி, ராணவை கீழே பிடித்து தள்ளி விடுகிறார். அப்படி தள்ளும்பொழுது ராணவக்கு கையில் சுளுக்குபட்டு கைவலியால் துடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் இதை பார்த்த சில போட்டியாளர்கள் அவன் நடிக்கிறான் என்று உதாசீனப்படுத்தி பேசி விட்டார்கள். ஆனால் உண்மையில் வலியால் தான் துடிக்கிறார் என்று உணர்ந்த அருண் அவரைக் தூக்கி வீட்டிற்குள் கூட்டிட்டு போகிறார். பிறகு டாக்டர் செக் பண்ணி பார்த்ததில் ராணவக்கு கையில் அடிபட்டு இருக்கிறது தெரிய வந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அவர் நிச்சயம் 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்ததாக விஷால் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் கூறுகிறார். அத்துடன் அன்சிதா, ராணவக்கு உண்மையிலேயே அடிபட்டு இருக்கிறது என்று நான் யோசிக்காமல் அந்த நேரத்தில் தவறாக பேசி விட்டேன் என்று வருத்தப்பட்டு கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்கிறார்.

ஆனால் சௌந்தர்யா, ராணவ் அந்த நிலைமையில் இருப்பதை பார்த்தும் கூட கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நீ மக்களிடம் ஒரு விதத்தில் தெரியணும் என்பதற்காக இந்த அளவுக்கு சீன் போடுகிறாய் என்று பேசி ராணவிடம் வாக்குவாதம் பண்ண ஆரம்பித்து விட்டார்.

இதை கேட்ட ராணவ் அப்படி என்னை வருத்திக்கொண்டு நான் விளையாட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று இரண்டு பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள். அடுத்ததாக ஜெஃப்ரியிடம் தனியாக பேசும் சவுந்தர்யா, அவனுக்கு அடிபட்டு இருக்கிறது என்பதற்காக நாம் எப்படி பொறுப்பாக முடியும்.

அது அவன் மீது தான் தவறு, இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்று இந்த நிலைமையில் கூட மோசமான கருத்தைதான் சௌந்தர்யா கொடுக்கிறார். அப்படி பார்த்தால் சௌந்தர்யா இத்தனை நாளாக அந்த வீட்டிற்குள் இருந்து பண்ணியது என்னது.

சௌந்தர்யா அவருடைய விளையாட்டையும் திறமையாக விளையாடவில்லை, யாரிடமும் அன்பாக பேசவில்லை. சும்மா நான் ஏதோ ஒரு க்யூட்டா பண்ணுகிறேன் என்று சில மொக்கையான விஷயங்களை பண்ணி தற்போது வரை அந்த வீட்டிற்குள் இருந்து வருகிறார். இவர் எல்லாம் ராணவ் பற்றி பேசுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை என்ற கருத்துக்கள் சௌந்தர்யாவுக்கு எதிராக திரும்பி வருகிறது.

Trending News