வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

சௌந்தர்யாவின் கொட்டத்தை அடக்கிய குடும்பம்.. பவி கெஞ்சி கேட்டும் கொடுக்க முடியாதுன்னு மறுத்த சவுண்டு

Bigg Boss 8 Tamil: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் சென்டிமென்ட் வாரம் என்று சொல்வதற்கு ஏற்ப உள்ளிருக்கும் போட்டியாளர்களின் குடும்பங்கள் சென்று அவர்களை கண்டிக்கும் விதமாகவும் மற்ற போட்டியாளர்களிடம் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால் அதை தட்டிக் கேட்கும் விதமாகவும் கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தீபக்கின் மனைவி அருணை பார்த்து நீங்கள் ஒரு ஸ்டார் ஆகவும், தீபக்கின் வயசு வித்தியாசத்தை காட்டி பேசினதும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அது தேவையில்லாத பேச்சும் கூட என்று அருணை கேள்வி கேட்டார். அடுத்ததாக மஞ்சரி குடும்பத்தில் இருந்து வந்த பொழுது மஞ்சரி அம்மாவும், அருணை பார்த்து நீங்கள் தான் அந்த ப்ராஜெக்ட் என்ற வார்த்தையை யூஸ் பண்ணுங்க.

ஆனால் பிரச்சனை என்று வந்த பொழுது நான் அந்த மாதிரி வார்த்தையை யூஸ் பண்ணவே இல்லை என்று சத்தியம் பண்ணும் அளவிற்கு மறுத்துவிட்டீர்கள் என்று அருணை பார்த்து கேள்வி கேட்டார். அடுத்ததாக விஷால் குடும்பம் வந்த நிலையில் செண்டிமெண்டாக பேசி பாசத்தை காட்டி விஷால் மீது இருந்த நெகடிவ் விமர்சனங்களை ஓரங்கட்டிவிட்டார்.

அடுத்ததாக ராணவ் குடும்பத்தில் இருந்து வந்த ராணவின் அக்கா, சௌந்தர்யாவிடம் ஒருத்தர் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் பொழுது நடிக்கிறார் என்று சொன்னது பார்ப்பதற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லி இருந்தார். அத்துடன் ராணவின் குடும்பம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து அருணுக்கு பெரிய நன்றி சொல்லி எங்கள் குலசாமியாக எங்கள் மகனை காப்பாற்றியதற்கு நன்றி என தெரிவித்தார்கள்.

இதனை அடுத்து சௌந்தர்யா, என்னுடைய அப்பா நிச்சயம் வருவாங்க வரும்போது எனக்கு பிடித்த கேக் வாங்கிட்டு வருவாங்க என பவித்ராவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு பவித்ரா பப்ஸ், ஹனி கேக் எல்லாம் கொண்டுட்டு வருவாங்க. எங்களுக்கும் அப்படியே கொடுத்துரு என்று சொல்கிறார். அதற்கு எல்லாத்துக்கும் ஏன் கொடுக்கணும் நாங்கள் என்ன பிரீ பேக்கரிய வச்சு நடத்துறோம் என சொல்லிவிட்டார்.

உடனே பவித்ரா, எல்லாத்துக்கும் சேர்த்துக் கொண்டு வர சொல்லு நாங்கள் காசு கொடுக்கிறோம் என்று கெஞ்சாதபடி கெஞ்சுகிறார். ஆனாலும் எதற்கும் இறங்காத சௌந்தர்யா, அப்பா ஒரு பப்ஸ் ஆவது யாருக்கும் தெரியாமல் பாக்கெட்குள்ள வச்சு கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்கிறார். சும்மா விளையாட்டுக்கு கூட தரோம் என்ற அகராதி சௌந்தர்யாவிடம் இருக்காது.

இதனை தொடர்ந்து சௌந்தர்யாவின் குடும்பமும் வந்து விட்டார்கள். இந்த குடும்பம் தான் தன் மகள் மீது இருக்கும் தவறை கண்டிக்கும் விதமாக மொத்த ஆணவத்தையும் அடக்கும் விதமாக அப்பா அம்மா மற்றும் அண்ணன் என தட்டி கேட்டு விட்டார்கள். அத்துடன் நண்பர்களை பற்றி பின்னாடி யாரிடமும் புறம் பேசக்கூடாது. கொஞ்சம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள் என்று நிறைய அட்வைஸ் பண்ணி சௌந்தர்யாவின் ஆணவத்தை அடக்கி விட்டார்கள்.

Trending News