வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பிறந்த நாளோடு நல்ல பேரை கெடுத்துக் கொண்ட குடும்ப குத்து விளக்கு.. நான் தப்பிச்சிட்டேன் என குஷியில் முதல் கணவர்

South actress gossips: அந்த ரஞ்சிக் கோப்பை நடிகைக்கு என்னதான் ஆச்சு என்று சினிமா ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டு புலம்புகிறார்கள். இப்படி ஒரு பொண்ண பார்த்தா, கையெடுத்து கும்பிட்டு கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒரு காலத்துல இவர்கள் தான் அந்த நடிகையின் பின்னாடி சுற்றியது.

சீரியல் நடிகையாக இருந்தாலும், சினிமாவில் ஹீரோயின் ஆக நடிக்கும் அளவுக்கு ரஞ்சிக் கோப்பை நடிகைக்கு அழகு இருந்தது. நேர்த்தியாக கட்டின புடவை, அதுக்கு ஏத்த மாதிரி அணிகலன்கள் என குடும்ப குத்து விளக்காக ஒவ்வொரு சீரியலிலும் நடித்திருப்பார்.

ஒரு சாதாரண காட்டன் புடவை கட்டினாலும் இந்த நடிகைக்கு அம்சமாகத்தான் இருக்கும். தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரஞ்சிக்கோப்பை நடிகை. அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விட்டார்கள்.

ஒரு பக்கம் நடிகை கணவர் மீது எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் அந்த கணவரோ ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு ரஞ்சிக் கோப்பை நடிகை மீது இருந்த அத்தனை காதலையும் வெளியில் சொல்ல ஆரம்பித்தார்.

நடிகர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட போது அவரைப் பற்றிய தேவை இல்லாமல் வாய்விட்டு எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டார் இந்த நடிகை. இனி உள்ளூரில் இருந்தால் வேலைக்கு ஆகாது என தன்னுடைய பிறந்த ஊரான அக்கட தேசத்தில் தஞ்சம் புகுந்தார்.

சில நாட்களுக்கு முன் தன் அப்பா வயதில் இருக்கும் நடிகர் ஒருவருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்தார். படம் ரிலீஸ் ஆனது கூட வெளியில் தெரியாத அளவுக்கு ஊத்தி மூடப்பட்டது. இருந்தாலும் அக்கட தேசத்தில் பெரிய ஹீரோயினாக ஆகிய தீருவேன் என சபதம் எடுத்து அடுத்தடுத்து வரும் படங்களை ஒப்புக் கொண்டார்.

அட! கதாநாயகி ஆகிறது பெருசு கிடையாது, மனசுல நிக்கிற மாதிரி படத்துல நடிக்கணும். ஆனா வர வாய்ப்பு பயன்படுத்தணும்னு அடல்ட் கதைகள் முதற்கொண்டு நடிக்க தொடங்கி விட்டாரா என்ற சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது. சமீபத்தில் ரஞ்சிக்கோப்பை நடிகைக்கு பிறந்தநாள் வந்தது.

நான் தப்பிச்சிட்டேன் என குஷியில் முதல் கணவர்

பிறந்தநாள் ட்ரீட்டாக தன்னுடைய ரசிகர்களுக்கு தான் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் அறிமுக வீடியோ வெளியிட்டார். எல்லாம் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்று பார்த்தால், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வீடியோவில், கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்குள் வரும் நடிகை தன்னுடைய உடை ஒவ்வொன்றாக கழட்டுவது போல் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தொடைக்கு மேல் ஒரு வெள்ளை சட்டை மட்டுமே போட்டுக் கொண்டு இருப்பது போல் அந்த வீடியோ முடிகிறது.

அவர்களை யாராவது நிறுத்துங்க அந்த சட்டையையும் கழட்டிட போறாங்க என்று இணையவாசிகள் புலம்புகிறார்கள். அம்மன் போல் காட்சியளித்த ரஞ்சிக் கோப்பை நடிகை, இப்படி அடல்ட் வீடியோக்களில் நடிப்பது பார்ப்பதற்கே முகம் சுளிக்கும் விதமாக இருக்கிறது.

தலைவா, நீ தப்பிச்சிட்ட இனி இனிமே இது உனக்கு வேலையே வேண்டாம் என்று அவருடைய கணவரை டேக் செய்து கமெண்ட் அடித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

Trending News