வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அள்ளிக் கொடுக்கும் மனைவியின் மூலம் ஆதாயம் அடையும் 5 நடிகர்கள்.. ஜெயம் ரவிக்கும், அருண் விஜய்க்கும் இன்று வரை கை கொடுத்த உறவு

South Indian Actors and their wives: அன்பான மனைவி, அழகான துணைவி அமைந்தாலே இன்பம். அதிலும் அள்ளிக் கொடுக்கும் மனைவி அமைந்தால் பேரின்பமே! என்பது போல் நடிகர்கள் பலரும் கோடீஸ்வரர் மகளை திருமணம் செய்து பெரிய பேக்ரவுண்டுடன் உள்ளனர் அவர்களில்  சிலர்,

துல்கர் சல்மான்: தமிழ், மலையாளம் என பல மொழிகளிலும் கலக்கி வரும்  துல்கர் மனைவி அமல் சூபியா உடன் டிசம்பர் 22 அன்று தனது 12 வது திருமண நாளை கொண்டாட உள்ளார். இவரது மனைவி அமல் சூபியா மல்டி மில்லினியர் செய்யது நிஜாமுதீனின் மகள் ஆவார். ஆர்கிடெக்ட் மற்றும் இன்டீரியர் டிசைனர் ஆன இவர் மாதம் சுமார் ஒரு கோடி சம்பாதிக்கிறார்.

ஆர்யா: ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்த போது காதல் வயபட்ட ஆர்யா மற்றும் சாயிஷாவிற்கு 2019 இல் திருமணம் நடைபெற்றது. சாயிஷாவின் பெற்றோர் பாலிவுட் நடிகர்களான சுமேத் மற்றும் ஷாகின்பானு.  இவருக்கு பாலிவுட்டில் வெயிட்டான பேக்ரவுண்ட் உள்ளது. மேலும் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் திலீப் குமாருக்கு சாய்ஷா பேத்தி முறை ஆவார்.

Also read: 2023ல் அனைவரும் எதிர்பார்த்து ஏமாற்றிய 5 இயக்குனர்கள்.. காக்க வைத்து மோசம் பண்ண பிரம்மாண்ட ஷங்கர்

விஷ்ணு விஷால்: நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த ஜுவாலா கட்டா வை 2022 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜுவாலா கட்டா இந்தியா பேட்மிட்டன் வீராங்கனை ஆவார். இருவருக்கும் முதல் திருமணம் விவாகரத்து ஆன நிலையில் இருவரும் செகண்ட் இன்னிங்ஸ்சை ஆரம்பித்து உள்ளனர். ஜுவாலாவின் தந்தை ஆந்திராவின் பெரிய தொழில் அதிபர் ஆவார்.

விஜய்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் 1999 ஆண்டு இலங்கையைச் சேர்ந்த சங்கீதா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்தார். இவர்களுக்கு  ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். சங்கீதா லண்டனில் உள்ள தொழில் அதிபரின் மகள் ஆவார். ஜேசன் சஞ்சய்க்கு கூட தனது தந்தையின் மூலம் படம் இயக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார் என்பது கூடுதல் தகவல்.

அருண் விஜய்: விஜயகுமாரின் மகனான அருண் விஜய் மற்றும் ஆர்த்தியின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். ஆர்த்தி பிரபல தொழில் அதிபர் மோகன் என்பவரின் மகள் ஆவார். இவருக்கு சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. இதன் மூலம் அருண் விஜய்  நடித்த பல படங்களை புரொடியூஸ் செய்தவரும் அவரே. அருண் விஜய் ஆர்த்தி தம்பதிக்கு பூர்வி என்ற மகளும் மற்றும் ஆர்நவ் விஜய் என்ற மகனும் உள்ளனர்.

Also read: வில்லனாக நடித்து பல கோடி சொத்து சேர்த்த 5 நடிகர்கள்.. விஜயகாந்தின் 50வது படத்தில் இணைந்த வில்லன்

Trending News