2040 மேஜிக் ஒர்க்கவுட் ஆயிடுச்சா? LIK படத்தின் வசூல் நிலவரம் இதோ!

சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘LIK’ திரைப்படம், திரையரங்குகளில் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வார இறுதி நாட்களில் மட்டுமின்றி, வார நாட்களிலும் தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருப்பதால், முதல் ஐந்து நாட்களிலேயே பெரிய வசூல் செய்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களின் வெற்றி அளவு இல்லை என்றாலும் ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்றுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலும் இந்தப் படம் கணிசமான வசூலை ஈட்டியுள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஓவர்சீஸ் வசூலும் மொத்தத் தொகையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புதுமையான கதைக்களம் 2K கிட்ஸ் மற்றும் இளைஞர்களைப் பெருமளவில் கவர்ந்துள்ளது. விக்னேஷ் சிவனின் மேக்கிங் மற்றும் அனிருத்தின் இசை படத்திற்குப் பெரிய பலமாக அமைந்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் சுமார் 28 கோடிக்கும் அதிகமான வசூலை இது ஈட்டியுள்ளதாகத் தெரிகிறது. உலகளவில் 42 கோடி வசூலை எட்டிப் பிடித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதனின் எதார்த்தமான நடிப்பும், எஸ்.ஜே.சூர்யாவின்நடிப்பும் திரையரங்குகளைக் கொண்டாட்டமாக மாற்றியுள்ளது. இவர்களுடன் கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு மற்றும் சீமான் ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்குப் கூடுதல் வலு சேர்த்துள்ளது.

அடுத்த வார இறுதிக்குள் இப்படம் 70 கோடி ரூபாயைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படமான ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ வரிசையில் இந்தப் படமும் 100 கோடி கிளப்பில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →