தமிழ் சினிமாவை யுனிவர்ஸ் என்கிற ஒரு மாயக்கண்ணாடிக்குள் கொண்டு வந்த பெருமை லோகேஷ் கனகராஜையே சாரும். ‘கைதி’யில் ஆரம்பித்து ‘விக்ரம்’ வழியாக ‘லியோ’ வரை நீண்டு கொண்டிருக்கும் இந்த LCU பயணம், இப்போது இந்திய சினிமாவே உற்று நோக்கும் ஒரு பிராண்டாக மாறிவிட்டது.
லோகேஷின் அடுத்த மிகப்பெரிய “LCU கமிட்மென்ட்” என்பது தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் உடன் அவர் இணையப்போகும் படம் தான். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை அல்லு அர்ஜுன் LCU-க்குள் நுழைந்தால், அது தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை ஒரு மிகப்பெரிய வணிக அதிர்வலையை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ (Benz) திரைப்படமும் இந்த யுனிவர்ஸில் இணையப்போகிறது. ஆனால், ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பது ரோலக்ஸ்தான் (சூர்யா).
லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ‘கைதி 2’, ‘விக்ரம் 2’ மற்றும் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கான ஒரு தனித் திரைப்படம் (Standalone Movie) என ஒரு பெரிய பட்டியலையே கையில் வைத்துள்ளார். ரசிகர்கள் இப்போது எதிர்பார்ப்பது எல்லாம் ” டில்லி, விக்ரம், லியோ மற்றும் ரோலக்ஸ் ஆகிய நால்வரும் ஒரே திரையில் தோன்றுவார்கள்?”. இது ஒரு அவெஞ்சர்ஸ் (Avengers) பாணி கிளைமாக்ஸாக இருக்கும்.
சாப்டர் ஜீரோ (Chapter Zero)
லோகேஷ் சமீபத்தில் ‘சாப்டர் ஜீரோ’ என்கிற குறும்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இது ‘கைதி 2’ படத்திற்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும். இதில் டில்லி கதாபாத்திரத்தின் பின்னணி மற்றும் அவர் ஏன் சிறைக்குச் சென்றார் என்கிற ரகசியங்கள் வரும் . அதேபோல், ‘விக்ரம்’ படத்தில் கமலஹாசனுடன் ஒரு சில நிமிடங்கள் வந்து மிரட்டிய சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர், லோகேஷின் டைரிப்படி ஒரு முழு நீள ‘டார்க்’ வில்லன் படமாக உருவாகப் போகிறது.
அமீர் கானுடன் ஒரு சூப்பர் ஹீரோ படம் பற்றி லோகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. ஒருவேளை அதுவும் LCU-க்குள் வந்தால், லோகேஷ் உருவாக்கிய இந்த போ..தைப் பொருள் ஒழிப்பு உலகம் ஒரு சர்வதேச தரத்திலான ஆக்ஷன் களமாக மாறும். ‘கூலி’ படத்திற்குப் பிறகு லோகேஷ் மீண்டும், டில்லி மற்றும் ஏஜென்ட் விக்ரமின் கதையைத் தொடர்வார் என்பதுதான் தற்போதைய நிலவரம்.