லைட்டிங் கவலை இனி இல்லை: ஷூட்டிங் ஸ்பாட்டில் சூரியனையே வரவழைக்கும் புதிய டெக்னாலஜி!

சினிமா ஷூட்டிங்னாலே நமக்கு ஞாபகம் வர்றது பெரிய செட்டு, நூத்துக்கணக்கான ஆட்கள், அப்புறம் அந்தப் கிரீன் மேட் (Green Mat) தான். ஆனா, இப்போ ஹாலிவுட்ல ஆரம்பிச்சு நம்ம கோலிவுட் வரைக்கும் ‘விர்ச்சுவல் புரொடக்ஷன்’ (VP) டெக்னாலஜி ஷூட்டிங் ஸ்டைலையே டோட்டலா மாத்திருச்சு.

முன்னாடி எல்லாம் ஹீரோ இமயமலைல நிக்கிற மாதிரி காட்டணும்னா, ஒண்ணு அங்க போயிருக்கணும், இல்லன்னா பச்சைத் திரை முன்னாடி நடிக்க வச்சு கம்ப்யூட்டர்ல பின்னணியைச் சேர்க்கணும்.

ஆனா இப்போ, ஒரு பெரிய எல்.இ.டி (LED) திரை முன்னாடி நின்னாலே போதும், திரையிலயே நிஜமான இமயமலை நம்ம கண்ணு முன்னாடி வந்து நிக்கும்.

இதோட மிகப்பெரிய பிளஸ் என்னன்னா, நடிகர்களுக்கு அந்தச் சூழல் நிஜமாவே அங்க இருக்குற மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும். கிரீன் மேட் முன்னாடி நடிக்கும்போது பின்னாடி என்ன இருக்குன்னே தெரியாம கற்பனை பண்ணி நடிக்கணும்.

ஆனா, இப்போ இந்த எல்.இ.டி திரையில வர்ற வெளிச்சமே நடிகர்களோட முகத்துல நிஜமான நிழலையும் வெளிச்சத்தையும் கொடுத்து, நடிப்பை இன்னும் இயல்பா மாத்துது!

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →