வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அஜித் கட்ட அவுட்டுக்கு போட்ட மாலை இத்தனை லட்சமா? வாயைப் பிளந்து பார்த்த விஜய் ரசிகர்கள்

அஜித் நடித்து இன்று வெளிவந்துள்ள துணிவு திரைப்படம் ஆரம்பத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதை அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர், இந்நிலையில் எச். வினோத் ஏற்கனவே இது முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்கான திரைப்படம் என்று அறிவித்து இருந்தார்.

இதன் அடிப்படையில் ரசிகர்கள் துணிவு படத்தை திரையில் பார்ப்பதற்கு ஆவலுடன் இருந்தனர். ரசிகர்கள் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பல இடங்களில் பேனர் மற்றும் கட்டவுட் வைத்து வந்தனர். மேலும் விஜய் ரசிகர்கள் இந்த கட்டவுட் பார்த்து வாயை பிளந்து வருகின்றனர், அந்த அளவிற்கு பிரமாண்டமாக துணிவு படத்திற்கு கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டை விட ஒரு படி மேலாக பெங்களூரில் உள்ள தமிழ் ரசிகர்கள் அதிக செலவில் கட்டவுட் வைத்துள்ளனர்.

Also read: அழுத்தமான மெசேஜ் சொல்லும் மாஸ் ஹீரோ அஜித்.. சரவெடியாக வெளிவந்த துணிவு எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

பெங்களூரில் வாழும் தமிழ் ரசிகர்கள் மிகவும் பிரமாண்டமான கட்டவுட் வைத்து அதற்கு சுமார் 7.5 லட்சம் மதிப்புள்ள மாலையை அணிவித்து உள்ளனர். இந்த கட்டவுட் ரெடி பண்ணுவதற்கு ரசிகர்கள் நான்கு மாதமாக நேரத்தை செலவழித்து இருக்கிறார்கள். மேலும் இந்த கட்டவுட்ல் மாலை போடுவதற்கு கிரேன் உதவியோடு தான் போடப்பட்டதாம்.

ஆனால் இந்த மாதிரியான பிரம்மாண்டமான மாலை போடக்கூடாது என சொல்லிய நிலையில் தற்போது இதை கழட்டும் படியாக ரசிகர்களிடம் உத்தரவு போட்டு உள்ளார். இதைக்கேட்ட ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திலும், கோபத்திலும் இருக்கின்றனர். இது மட்டுமில்லாமல் கட்ட அவுட்டுக்கு பால் அபிஷேகமும் செய்து வருகின்றனர்.

Also read: துணிவு கொண்டாட்டத்தில் உயிரிழந்த ரசிகர்.. தூக்கத்தை தொலைத்த அஜித்

இந்த மாதிரியான செயல்கள் வேண்டாம் என்று தான் அஜித் அவர்கள் வீண் செலவுகளையும் இதற்கான நேரத்தையும் வீணாக்க கூடாது என்று முன்னதாகவே அவர்களின் ரசிகர்களுக்கு வலியுறுத்தி இருக்கிறார். ஆனாலும் ரசிகர்கள் அஜித் மேல இருக்கும் அசைக்க முடியாத அன்பை வெளிக்காட்டு விதமாக இந்த மாதிரியான செயல்களை செய்து கொண்டு தான் இருக்கின்றனர்.

இப்பொழுது துணிவு திரைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அஜித்திற்கு துணிவு திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: அஜித் மிரட்டும் ஒன் மேன் ஷோ.. துணிவு எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

Trending News