Spiritual discourse in government school: தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருவது அரசு பள்ளியில் நடந்த சம்பவங்கள் தான். அதாவது சென்னை அசோக் நகரில் இருக்கும் அரசு பள்ளியில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் மோட்டிவேஷனல் ஸ்பீச் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதில் சிறப்பு விருந்தினராக பேசுவதற்கு பரம்பொருள் பவுண்டேஷனை சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து இருக்கிறார்கள்.
அப்படி வந்த மகாவிஷ்ணு என்பவர் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தன்னம்பிக்கையான பேச்சுக்களை பேசுவதை விட்டுவிட்டு பாவம், புண்ணியம், மறுபிறவி, மந்திரங்களை படித்தால் நோய் குணமாகும். குருகுல கல்வி சிறந்தது என ஆன்மீகத்தை பற்றி சொற்பொழிவு செய்திருக்கிறார்.
கண் பார்வையற்ற ஆசிரியருக்கு நடந்த அவமரியாதை
அத்துடன் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால் தான் மாற்றுத்திறனாளியாகவும் ஏழைகளாகவும் இப்பொழுது பிறந்து கை, கால், கண் இல்லாமல் இந்த ஜென்மத்தில் படாதபாடு பட்டு வருகிறார்கள் என்பதை பற்றி பேசி இருக்கிறார்.
இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அங்கே இருந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் இவர் பேசிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால் மகாவிஷ்ணு, ஆசிரியர் என்று கொஞ்சம் கூட மரியாதை கொடுக்காமல் அவமரியாதைப்படுத்தும் விதமாக கனத்த குரலிலும், தெனாவெட்டான பேச்சும் பேசி ஆணவத்துடன் நடந்திருக்கிறார்.
இதனால் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ரொம்பவே காயப்பட்டதோடு பார்வையற்ற ஆசிரியரை அறிவற்றவர் என சொற்பொழிவாளர் பேசியதனால் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் இது மிகவும் கண்டிக்கக்கூடிய விஷயமாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதாவது பத்திரிகையாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என்னுடைய ஏரியாவுக்கு வந்து என் ஆசிரியரை அவமானப்படுத்திட்டு போயிருக்கிறாய். அவ்வளவு சீக்கிரமாக உன்னை நான் சும்மா விடமாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் கண் பார்வையற்ற கல்வி ஆசிரியரை கௌரவிக்கும் விதமாக அவரே பாராட்டி பேசி அவருக்கு ஏற்பட்ட அவ மரியாதைக்கு நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.
அரசு பள்ளியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இல்லாமல் தேவையில்லாத விஷயத்தை பேசிய நபரை தட்டி கேட்ட ஆசிரியர் சங்கரை அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டுகளை தெரிவித்து கௌரவப்படுத்தி இருக்கிறார்.