வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

5 பிரபலங்களின் பெயரை கெடுத்த ஸ்ரீரெட்டி.. இன்றுவரை மறுக்காத ஹீரோக்கள்

தெலுங்கு சினிமா பிரபலங்களின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு வருபவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள சிலர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். ஆனால் அந்த நடிகர்கள் இவர் சொன்னதை ஆதரிக்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அவ்வாறு சர்ச்சையில் சிக்கிய 5 பிரபலங்களை தற்போது பார்க்கலாம்.

ஸ்ரீகாந்த் : தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இந்நிலையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க ஹைதராபாத் வந்த போது ஸ்ரீகாந்த் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறி ஸ்ரீ ரெட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இதனால் ஸ்ரீகாந்தின் பெயருக்கு அவபெயர் வந்தது.

ஏ ஆர் முருகதாஸ் : இயக்குனர் முருகதாஸ் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஸ்ரீ ரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், வணக்கம் தமிழ் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ஜி. எப்படி இருக்கிறீர்கள், க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகமிருக்கிறதா என்று பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து முருகதாஸ் மாமாவுக்கு பெண்களை திருடுவது மற்றும் திரைப்பட கதைகளை திருடுவதும் பிடிக்கும் என பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

விஷால் : தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் விஷால். தொடர்ந்து பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வந்த ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் விஷாலை நண்பர் என ஆரம்பித்து கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அனகோண்டா முடித்திருந்தார்.

நானி : பிரபல நடிகர் நானி பிக் பாஸ் சீசன் 2 தெலுங்கில் தொகுத்து வழங்கும்போது ஸ்ரீ ரெட்டி நானி ஒரு குடிகாரர், பெண்களை விரும்பும் ஒருவர் என்று அவதூறாக பேசி இருந்தார். இதனால் அப்போது நானியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஸ்ரீ ரெட்டி செயல்பட்டார்.

பவன் கல்யாண் : பவர் ஸ்டார் பவன் கல்யாணை குறிவைத்து ஸ்ரீ ரெட்டி சர்ச்சையை கிளப்பிய இருந்தார். முன்னதாக பவன் கல்யாண் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக கூறி பின்பு மன்னிப்பு கேட்டிருந்தார். அதன் பின்பு மீண்டும் பவன் கல்யாண் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அப்போது பவன் கல்யான் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் திட்டி இருந்தனர்.

Trending News