புதன்கிழமை, ஜனவரி 22, 2025

முத்துவை புரிந்துகொண்டு சுருதி எடுத்த முடிவு.. விஜயா மூலம் டார்ச்சர் அனுபவிக்க போகும் ரோகிணி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரவி இன்னும் வீட்டுக்கு வராததால் முத்துவின் அப்பா அண்ணாமலை ரொம்பவே வருத்தப்படுகிறார்.

அதனால் அவரை மறுபடியும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றால் ரவியும் சுருதியும் வீட்டிற்கு வந்தால் தான் சரியாகும் என்று மீனா முத்துவிடம் கூறுகிறார்.

அதற்கு ஏற்றபடி முத்துவும் மீனாவும் தனித்தனியாக சுருதி மற்றும் ரவியிடம் பேசி மன்னிப்பு கேட்கிறார்கள். இருந்தாலும் ஸ்ருதி வராமல் நான் வரமாட்டேன் என்று ரவி கூறிவிட்டார்.

அதே மாதிரி ஸ்ருதியும் மீனாவிடம் எந்தவித பதிலும் சொல்லாமல் அம்மா வீட்டுக்கு போய் விட்டார்.

தற்போது சுருதி, ரவியை பிரிந்து தனியாக இருக்கிறார் என்று தெரிந்ததும் சுருதி வீட்டில் பார்த்து வைத்த விச்சு என்பவர் சுருதியை நடுரோட்டில் வைத்து வம்பு இழுக்கிறார்.

அங்கு வந்த முத்து உடனே விச்சுவை அடித்து துரத்தி விட்டார். பிறகு சுறுதியிடம் நான் பண்ண தப்புக்கு என் தம்பியை தண்டித்து விடாதே என்று பக்குவமாக பேசுகிறார்.

அடுத்து வீட்டிற்கு போன சுருதி, விச்சு செய்ததை சொன்னதும் உடனே சுருதியின் அப்பாவும் அம்மாவும் இதற்கு காரணம் முத்துவின் ஏற்பாடு தான் இருக்கும் என்று தொடர்ந்து தவறாக பேசுகிறார்கள்.

விஜயாவிடம் மாட்டிக்கொண்ட ரோகினி

இதை கேட்டதும் சுருதி அப்பா அம்மாவை எதிர்த்து பேசி, நீங்கள் பண்ணியது தான் தவறு. மீனாவை அங்கே அனைவரது முன்னாடியும் அவமானமாக பேசி குடும்பத்தை தரவாக பேசியதால்தான் இவ்வளவு தூரத்துக்கு பிரச்சனை வந்தது.

இப்பொழுது நான் ரவியுடன் அங்கே இருப்பது தான் சரி. அங்கே என்னை எல்லோரும் நன்றாக தான் பார்த்துக் கொண்டார்கள். அதனால் இனிமேல் என்னுடைய வீடு அது தான். நான் இங்கே வரமாட்டேன் என்று கிளம்பி விட்டார்.

கடைசியில் முத்து, சுருதி மற்றும் ரவியை ஒன்று சேர்த்து விட்டார். இதனை தொடர்ந்து விஜயா, இனி ரோகிணிக்கு தான் டார்ச்சர் கொடுக்கப் போகிறார்.

அதாவது ஏன் இன்னும் உன்னுடைய அப்பா வரவில்லை. மனோஜ்க்கு பணம் கொடுத்து பிசினஸுக்கு உதவ வேண்டும் என்று ஒவ்வொரு செக்காக வைக்கப் போகிறார்.

இதனால் இனி ரோகினி விஜயாவிடம் மாட்டிக்கொண்டு முழிக்க போகிறார்.

Trending News