வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

‘தி பெட்’ டபுள் மீனிங் படம்.. மேடையில் உண்மையை போட்டு உடைத்த ஸ்ரீகாந்த்!

ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தி பெட். இந்த படத்தை இயக்குநர் எஸ்.மணிபாரதி இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். திரையுலகில் காணாமல் போன ஶ்ரீ காந்துக்கு இது முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ஐடியில் பணிபுரியும் ஊழியராக ஶ்ரீகாந்த் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படத்தில் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை என்று சொல்லப்படுகிறது.

படப்பிடிப்பு முழுக்க ஊட்டியில் என்பதால் குறைந்த ஆடை அணிந்து கடும் குளிரில் நாயகி சிருஷ்டி நடித்து முடித்து கொடுத்து இருக்கிறார். இந்த அனுபவம் பற்றி அவர் இந்த படத்தின் புரோமோசனில் கலந்து கொண்டு மேடையில் பேசிய போது, இந்த படத்தில் உடல் நடுங்கும் கடும் குளிரில் நடுங்கிக்கொண்டே நடிக்க வேண்டிய சூழல் இருந்தது. சில நேரங்களில் குளிர் ஜுரம் கூட எனக்கு வந்துவிட்டது.

அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து காட்சிகளில் எளிதாக நடிக்க உதவினார் என்று கூறி இருக்கிறார். படத்தின் கதைப்படி ஊட்டியில் இருக்கும் விடுதியில் உள்ள ஒரு பெட் தன்னை தேடி வருபவர்களை பற்றி கூறுவது போல கதை அமைந்து இருக்கிறது. அப்படி ஒரு வித்தியாசமான கோணத்தில் இயக்குனர் கதையை நகர்த்திச் சென்று இருக்கிறார்.

ஆக, பெட்டில் இவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் அடிக்கிற குளிரில் கன கச்சிதமாக வந்து இருக்கும் போல. அதைத்தான் நாயகி சிருஷ்டி பொடி வைத்து கூறி இருக்கிறார் என்று ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை, சூட்டிங் நேரத்தில் தனக்குத் பக்கபலமாக இருந்து காட்சிகளை மிக அற்புதமாக எடுக்க உதவினாராம். அதைத் தவிர ஸ்ரீகாந்த் பேசும்போது குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்கலாம் டைட்டிலை வைத்து முடிவு செய்யாதீர்கள் என்பதை தெளிவாக புரிய வைத்து விட்டாராம்.

இப்போது வரக்கூடிய பல படங்கள் கொஞ்சம் மார்க்கமாகதான் இருக்கிறது. அந்த வரிசையில் இந்த படத்தை சேர்த்து விடாதீர்கள் என்பதை ஸ்ரீகாந்த் பேசும் போதே தெரிகிறது. இருந்தாலும் ஶ்ரீகாந்த் வெற்றி படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனால் இந்த படம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Trending News