சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

டார்ச்சரில் சிக்கிய சிருஷ்டி டாங்கே.. தரமான செய்கையால் பக்கம் வர பயந்த வில்லன் நடிகர்

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். தற்போது இவரின் நடிப்பில் த பெட் என்ற சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து ஜான்விஜய், சிருஷ்டி டாங்கே, தேவிப்பிரியா, பாண்டி, விஜே பப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஊட்டியில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த திரைப்பட குழுவினருடன் ஒரு பிரஸ் மீட் நடந்துள்ளது. அதில் பேசிய படத்தின் ஹீரோயின் சிருஷ்டி டாங்கே படக்குழுவினர் அனைவரைப் பற்றியும் பேசினார். அதோடு அவர் சக நடிகர் ஜான் விஜய் பற்றிய புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் பிரபல காமெடி நடிகராக பல திரைப்படங்களில் நடித்து வருபவர் ஜான் விஜய். தற்போது இந்த பெட் திரைப்படத்தில் நடித்துள்ள அவர் சிருஷ்டி டாங்கேவை பார்த்து மிகவும் பயப்படுவாராம். ஏனென்றால் அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அனைவரையும் ஏதாவது பேசி கலாய்த்து கொண்டே இருப்பாராம்.

அதேபோல் ஹீரோயினையும் அவர் பயங்கரமாக கிண்டல் என்ற பெயரில் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் பதிலுக்கு சிருஷ்டியும், ஜான் விஜய்யை அதிகமாக கலாய்த்து தள்ளி விடுவாராம். ஒரு பொண்ணு இப்படி கலாய்க்குதே என்று பயந்த ஜான் விஜய், சிருஷ்டி டாங்கே இருக்கும் பக்கமே செல்ல மாட்டாராம்.

இந்த புதிய தகவலை பிரஸ்மீட்டில் கூறிய சிருஷ்டி டாங்கே, ஜான் விஜய் மிகவும் கலகலப்பானவர் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திரைப்படம் ரசிகர்களை கவரும் வகையில் நன்றாக வந்துள்ளதாக கூறிய அவர் இப்படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Trending News