புதன்கிழமை, ஜனவரி 22, 2025

முத்துவை ஓவராக அடக்கி அட்டகாசம் பண்ணும் மீனா.. சப்போட்டா நின்னு குடும்பமானதை காப்பாற்றிய சுருதி

Sirakadikkum Asai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவால் தான் ஏதாவது பிரச்சினையாகும் என்ற பயத்தில் மீனா மற்றும் அண்ணாமலை ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆக கண்டிஷன் போட்டு இருக்கிறார். அதாவது தேவையில்லாமல் வாயை திறக்க கூடாது. யாரிடமும் எந்த தகராறையும் பண்ணக்கூடாது என்று முத்துவை அடக்கி வைத்திருக்கிறார்கள்.

போதாததற்கு மீனா, முத்து பக்கத்திலேயே இருந்து நோட்டமிட்டு வருகிறார். ஒருவிதத்தில் இது சரியாக இருந்தாலும், வேணுமென்று முத்துவை வம்பு இழுத்து பிரச்சினையை உண்டாக்க வேண்டும் என்று நடக்கும் சதி வேலைகளில் முத்து ஒவ்வொரு முறையும் மாட்டிக் கொள்கிறார்.

ஆனாலும் முத்து, அப்பாவின் மனசு கஷ்டப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அனைத்தையும் தாங்கிக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறார். கடைசியாக மீனா கொஞ்சம் கழண்டு கொண்டதும், ரோகிணி ரெடி பண்ண ஆளு முத்துவை நைசாக பேசி வெளியில் கூட்டிட்டு போகிறார்.

அங்கே காருக்குள்ளேயே குடிக்கிறதுக்கு அனைத்து வகையான விஷயங்களையும் ஏற்பாடு பண்ணி வைத்து முத்துக்கு ஆசை காட்டுகிறார். ஆனாலும் முத்து இதெல்லாம் தகர்த்து எறிந்து இந்த மாதிரி விஷயத்தில் மாட்டிக் கொள்ளாமல் எஸ்கேப் ஆகி விடுவார்.

சப்போட்டாக நிற்கும் சுருதி

அதே நேரத்தில் வருகிற ஒவ்வொரு பிரச்சனையையும் தாண்டி இந்த பங்க்ஷன் நல்லபடியாக முடிந்துவிடும். அப்படியே ஒரு சில பிரச்சினைகள் வந்தாலும் சுருதி, ரவி குடும்பத்துக்கு சப்போர்ட்டாக நின்னு குடும்ப மானத்தை காப்பாற்றப் போகிறார். ஆனால் எல்லாமே சுமூகமாக நடந்தால் கண்டிப்பாக ரோகிணி மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் இந்த பங்க்ஷனில் எப்படியாவது ரோகிணி அப்பாவை பார்த்து விட வேண்டும் என்று விஜயா கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார். அந்த வகையில் முத்துவை வைத்து எந்த பிரச்சனையும் நடக்கவில்லை என்றால் ரோகிணி விஜயாவிடம் சிக்கி விடுவார்.

ஆனாலும் பொய்ப்பித்தலாட்டம் பண்ணுவது எப்படி, ஈசியாக எப்படி தப்பித்துக் கொள்ளலாம் என்று ரோகினிக்கு தெரிந்த விஷயம். அதனால் இந்த முறையும் விஜயாவை ஏமாற்றி விடுவார். ஏனென்றால் ரோகினி பற்றிய உண்மையான விஷயங்கள் தெரிந்து விட்டால் இந்த நாடகத்தின் கதை பாதி முடிவுக்கு வந்துவிடும்.

அந்த வகையில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா என்பது போல் எந்த பிரச்சினையும் இல்லாமல் தாலி பெருக்கு பங்க்ஷன் நல்லபடியாக முடிந்துவிடும்.

Trending News