அத்துமீறி சைஸ் கேட்ட ரசிகர்.. தக்க பதிலடி கொடுத்த ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசனின் சொந்த வாழ்க்கையில் பல காதல் தோல்விகளை சந்தித்து உள்ளார். இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை அவ்வப்போது ஸ்ருதிஹாசன் பதிவிட்டுவருவார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது காதலன் பிறந்தநாளை ஸ்ருதிஹாசன் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடி இருந்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசனும் அவரது லிப் லாக் கிஸ் அடிக்கும் புகைப்படங்கள் மற்றும் கேவலமாக வடிவமைக்கப்பட்ட கேக் ஆகிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதற்கு பல நெகட்டிவ் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். மேலும் பல ரசிகர்கள் இதை விமர்சித்தும் வந்தனர். இது இணையத்தில் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில் பல பிரபலங்களும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வருகிறார்கள். அப்போது அவரது ரசிகர்கள் பல கேள்விகள் கேட்கின்றனர். அவ்வாறு ஸ்ருதிஹாசன்யிடம் உங்களது லிப்ஸ் சைஸ் என்ன என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்கு ஸ்ருதி ஹாசன் லிப் சைஸ் என்று ஒன்று இருக்கிறதா எனக் கேட்டிருந்தார்.

மேலும் ஒரு செல்பி புகைப்படத்தை பதிவிட்ட இதை வைத்து அளந்து கொள்ளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்கள் பல நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினாலும் இது போன்ற தேவையில்லாத கேள்விகளும், பதில்களும் பகிரவும் பயன்படுகிறது.