ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

Aranmanai 4 : 2 வாரங்கள் ஆகியும் அள்ள அள்ள குறையாத அரண்மனை 4 வசூல்.. கவின், தாஸுக்கு ஆட்டம் காட்டும் சுந்தர் சி

சுந்தர் சி இயக்கத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாக அரண்மனை 4 படம் வெளியானது. இதில் சுந்தர் சி, ராசி கன்னா மற்றும் தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு திரையரங்குகளில் இப்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை கவின் நடிப்பில் ஸ்டார் மற்றும் அர்ஜுன் தாஸின் ரசவாதி ஆகிய படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படங்களின் வருகையால் அரண்மனை 4 படத்தின் வசூல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதையெல்லாம் தவிடு பொடி ஆக்கி இப்போதும் அள்ள அள்ள குறையாமல் வசூல் செய்து வருகிறது. இதன்படி வெள்ளிக்கிழமை 2.25 கோடி வசூல் செய்த நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி வசூல் செய்திருக்கிறது.

அரண்மனை 4 படத்தால் திணறும் கவின், அர்ஜுன் தாஸ்

தமிழ்நாட்டில் மொத்தம் இப்போது 38.35 கோடி வசூல் செய்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை கவின் நடிப்பில் அட்டகாசமாக வெளியாகி இருக்கிறது ஸ்டார் படம். இந்தப் படம் முதல் நாளில் 2.70 லட்சம் வசூல் செய்திருந்தது. நேற்றைய தினம் 3.80 லட்சம் வசூல் செய்திருக்கிறது.

அதேபோல் அர்ஜுன் தாஸின் மிரட்டலான நடிப்பில் ரசவாதி படம் வெளியானது. இந்த படம் முதல் நாளில் மூன்று கோடி வசூல் செய்தது. நேற்று வெள்ளிக்கிழமை 3.2 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆனாலும் இந்த படத்திற்கு விமர்சனங்கள் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது.

ஆகையால் வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் புது வரவாக வந்த இந்த படங்களின் வசூலை காட்டிலும் அரண்மனை 4 படம் தான் ரேசில் முதலில் இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூல் இருக்க வாய்ப்புள்ளது.

Trending News