புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Star: கவின் வெளியிட வேண்டாம் என கெஞ்சி கேட்ட ஸ்டார் பட 3 சர்ப்ரைஸ்.. ஈகோ பார்க்காமல் வந்த பிரபலம்

Star: இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் இன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பெரும் ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள் இன்று தியேட்டர்களில் பயங்கர அலப்பறை செய்து வருகின்றனர்.

இதில் கவினும் தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் முதல் காட்சி முடிந்த உடனே பாசிட்டிவ் விமர்சனங்களும் வரத் தொடங்கியது.

அதையடுத்து தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஸ்டார் படம் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் மூன்று சர்ப்ரைஸ் என்ன என்பதையும் சில நெட்டிசன்கள் தெரியப்படுத்தி வருகின்றனர்.

ஸ்டார் படத்தின் 3 சர்ப்ரைஸ்

அதன்படி கோலிவுட் டாப் இயக்குனர் ஒருவரின் கேமியோ கதாபாத்திரம் படத்தில் இடம்பெற்றுள்ளது. கிளைமாக்சில் வரும் அந்த காட்சி நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதற்கு அடுத்ததாக பாக்ஸ் ஆபிஸ் ஹீரோ ஒருவரின் கேமியோ இருக்கிறது. இதை நிச்சயம் யாருமே எதிர்பார்த்து இருக்க முடியாது.

அடுத்தபடியாக யுவன் விண்டேஜ் பாடல் ஒன்றை கொடுத்து மெர்சல் ஆக்கிவிட்டார். ஏற்கனவே படத்தில் யுவன் சங்கர் ராஜா பயங்கரமாக ஸ்கோர் செய்து விட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் சர்ப்ரைஸாக இடம் பெற்றுள்ள பாடலும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இப்படி இந்த மூன்று இன்ப அதிர்ச்சிகளை வழங்கி நம்மை கவர்ந்து விட்டார் இயக்குனர். அதில் ஈகோ பார்க்காமல் கெஸ்ட் ரோலில் நடித்த ஹீரோவை தான் பாராட்ட வேண்டும்.

Trending News