Super Star Rajini: சினிமாவில் படிப்படியாக முன்னேறி தற்போது உச்சத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொதுவாக யாருடைய மனமும் புண்படக் கூடாது என நினைக்க கூடியவர். ஆனால் இவரை ஐந்து பிரபலங்கள் காயப்படுத்தி இருக்கின்றனர். அதிலும் மூத்த நடிகை மனோரமா அப்படியே வடிவேலு செய்த அதே தவறை செய்து ரஜினியை வருத்தமடைய செய்தார்.
சத்யராஜ்: ரஜினியுடன் இணைந்து மிஸ்டர் பாரத் போன்ற சில படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ், அதன் பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அவர் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தார், ஆனால் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு நிறையவே வந்தது. ஆனால் அவற்றை ஏற்க மறுத்துவிட்டார், காரணம் காவேரி பிரச்சனையின் போது அவர்களுக்குள் ஏற்பட்ட அம்மண கசப்பு தான் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினை மிகப் பெரிய அளவில் போராட்டமாக வெடித்த சமயத்தில் பல நடிகர் நடிகைகள் இந்த பிரச்சனைக்காக குரல் கொடுத்தனர். அப்போது தமிழர்களுக்காக பேசிய சத்யராஜ் பல விஷயங்களை முன் வைத்தார். அவர் தமிழ் நடிகர்கள் மட்டுமே இந்த பிரச்சனைக்கு குரல் கொடுப்பார்கள், வேறு மொழி நடிகர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க மறுக்கிறார்கள் என ரஜினி தாக்கி பேசியது சூப்பர் ஸ்டாரை காயப்படுத்தியது. இதற்காக ரஜினியும் பெரிய அளவில் தன்னுடைய கருத்தை முன் வைக்கவில்லை. இப்போது வரை இவர்கள் இருவரும் எதிரெதிர் துருவமாகவே இருக்கின்றனர், சத்யராஜ் இதுவரை சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க மறுத்து வருகிறார்.
Also Read: நான் நடிகன் மட்டுமல்ல என்பதை நிரூபித்த ரஜினி.. அரைமணி நேரத்தில் அரங்கை அதிர வைத்த தலைவர்
ஜெயலலிதா: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் போயஸ் கார்டனில் ஒரே தெருவில் வசித்து வந்தனர். ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு அதிக கெடுபிடி காட்டினார். அவர் கார் சாலையில் செல்லும்போது சாலைகளில் வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்படும், வாகனங்களை ஆஃப் செய்ய வேண்டும் என போலீசார் மிரட்டுவார்கள்.
ஜெயலலிதாவின் இந்த போக்கு ரஜினிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை, இதனால் டிராபிக் ஏற்பட்டது. அது மட்டுமல்ல ரஜினிகாந்த் எப்போதும் சோழா ஹோட்டலில் இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு நடந்து வருவார். ஆனால் போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் போலீசார் ஜெயலலிதாவின் வீடு இருப்பதால் ரஜினியை நடந்து வரக்கூடாது என டார்ச்சர் செய்தனர். இது சூப்பர் ஸ்டாரை மிகவும் காயப்படுத்தியது.
Also Read: யாரு சொன்னா விஜய்ய தப்பா பேசினாருன்னு.. தூக்கி விட்டு அழகு பார்த்த ரஜினி, இவர் கூடவா போட்டி?
இளையராஜா: ஆரம்பத்தில் ரஜினியின் பெரும்பாலான படங்களுக்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்து வந்தார். ஆனால் வீரா படத்திற்கு பிறகு கடந்த 28 வருடங்களாக ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைப்பதில்லை. காரணம் இளையராஜாவின் கொள்கை ரஜினிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. இவருடைய பாடலை பின்னணி பாடகர்கள் யார் எங்கு பாடினாலும் அனைவரிடமும் காசு வேண்டும் என்று கேட்பது சூப்பர் ஸ்டாருக்கு பிடிக்கவில்லை. அதன் காரணமாகவே ரஜினி, இளையராஜா உடன் ஒட்டாமலே இருக்கிறார்.
டாக்டர் ராமதாஸ்: பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த கட்சியினர் ரஜினி ரசிகர் மன்றத்தின் மீது கல் வீசியும் தாக்குதல் நடத்தினர். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் வருத்தம் அடைந்தார். அது மட்டுமல்ல பாபா பட ரிலீஸ் இன் போது ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அதோடு மட்டுமல்லாமல் தியேட்டரில் புகுந்து பாமகவினர் பட பெட்டிகளை தூக்கி ரோல்களை எரித்தனர். இப்படி இரு தரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டதால் இந்த விஷயம் ரஜினி மிகவும் பாதித்தது. இப்போதுதான் இருதரப்பினரும் கொஞ்சம் அமைதியாக இருக்கின்றனர்.
மனோரமா: நடிப்புலகத்தினை தாண்டி சினிமா பிரபலங்கள் அரசியல் பிரவேசமும் நடத்தி வருகிறார்கள். அப்படிதான் ஆச்சி மனோரமா அவர்களும் வடிவேலு செய்த அதே தவறை செய்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார். ரஜினி உச்சத்தில் இருந்த சமயத்தில் ஏடிஎம்கே உடன்அவருக்கு உரசல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக பேசிய மனோரமா பல பிரச்சார மேடைகளில் ரஜினியை கேவலமாக விமர்சித்து பேசியுள்ளார். அந்த காலகட்டத்தில் ரஜினியை இவ்வளவு தரைக்குறைவாக யாரும் பேசவில்லை.
ஆனால் மூத்த நடிகையான மனோரமா இதை செய்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. அது மட்டுமல்ல ரஜினியை பல படங்களில் அரவணைத்த கைகள் இப்போது ஓங்கி அடிப்பது அவரை மிகவும் காயப்படுத்தியது. இருப்பினும் தமிழ் சினிமா அவரை ஒதுக்கி வைத்து விடக்கூடாது என்பதற்காக இந்த பிரச்சனை முடிந்து 6 மாதம் கழித்து அண்ணாமலை படத்திற்கு மனோரமாவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ரஜினி அழுத்தி சொல்லி இருக்கிறார். அந்தப் படப்பிடிப்பு தளத்தில் கூட ரஜினி மனோரமாவிடம் எதுவும் கேட்கவில்லை, இது மனோரமாய்வையும் அவராகவே ரஜினியிடம் சற்று ஒதுங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.