Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

திரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்.. ‘இளைய புரட்சித் தலைவி’ பெயரில் புதிய பேரவை!

திரிஷாவுக்கு ஆதரவாக களமிறங்கிய ரசிகர்கள்.. ‘இளைய புரட்சித் தலைவி’ பெயரில் புதிய பேரவை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா.கடந்த சில மாதங்களாகவே இவரது பெயர் சினிமாவைத் தாண்டி அரசியல் வட்டாரங்களிலும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக,தமிழக அரசியல் சூழலில் முதல்வர் விஜய்யுடன் திரிஷாவின் பெயரும் அடிக்கடி விவாதத்திற்கு உள்ளாகி வரும் நிலையில்,தற்போது அவரது பெயரில் தொடங்கப்பட்டுள்ள புதிய அமைப்பு கவனம் ஈர்த்துள்ளது.


அந்த வகையில்,திருநெல்வேலியில் நடிகை திரிஷாவின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.இதற்கான அறிவிப்பும்,அமைப்பின் அடையாளச் சின்னமும் தற்போது வெளியாகி சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.


இந்த அமைப்பின் மூலம் நடிகை திரிஷாவுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன்,அவரது பெயரில் பல்வேறு நற்பணிகளை முன்னெடுக்கவும் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக,திரிஷாவை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பேரவையின் பெயரே பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


ஏற்கெனவே மதுரையில் திரிஷா நற்பணி மன்றம் தொடர்பான போஸ்டர்கள் வெளியாகி அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தன. தற்போது திருநெல்வேலியிலும் அவரது பெயரில் புதிய பேரவை தொடங்கப்பட்டிருப்பது,இந்த விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
இருப்பினும்,இந்தப் பேரவை நடிகை திரிஷாவின் நேரடி ஒப்புதலுடன் தொடங்கப்பட்டதா?அல்லது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் தனிப்பட்ட முயற்சியா?என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.


ஒருபுறம் திரிஷாவின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்புகளும்,மறுபுறம் அவரது பெயரில் உருவாகும் ரசிகர் அமைப்புகளும் கவனம் பெற்று வரும் நிலையில்,இந்தப் புதிய பேரவை அடுத்தகட்டமாக என்னென்ன செயல்பாடுகளை முன்னெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.