Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

4-வது வாரத்திலும் குறையாத மவுசு: பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை எட்டிய ‘சீன்’ திரைப்படம்!

4-வது வாரத்திலும் குறையாத மவுசு: பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை எட்டிய ‘சீன்’ திரைப்படம்!

தியேட்டர்களில் வெளியாகும் படங்கள் முதல் வாரத்திலேயே அதிக வசூலைப் பெறுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும்,சில படங்கள் வாரங்கள் கடந்தும் ரசிகர்களின் ஆதரவுடன் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கவனம் ஈர்த்து வருவது ‘சீன்’படம்.

இப்படம் வெளியாகி நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையிலும்,அதன் டிக்கெட் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக,புக் மை ஷோ தளத்தில் மட்டும் இதுவரை 40,40,110 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அதாவது 40.4 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையைப் படைத்துள்ளது.

வார வாரமாகப் படத்தின் டிக்கெட் விற்பனை எண்ணிக்கையைப் பார்க்கும்போது அதன் வரவேற்பு எந்த அளவிற்கு இருந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. முன்பதிவில் மட்டும் 5.44 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

முதல் வாரத்தில் 26.3 லட்சம் டிக்கெட்டுகளும்,இரண்டாவது வாரத்தில் 7.16 லட்சம் டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளன.தொடர்ந்து மூன்றாவது வாரத்தில் 1.37 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன.தற்போது நான்காவது வாரத்தின் புதன்கிழமையிலும் மட்டும்13,390 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.வாரங்கள் கடந்தும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது.

பொதுவாக புதிய படங்களின் வருகையால் பழைய படங்களின் வசூல் குறைவது இயல்பானது.ஆனால், நான்காவது வாரத்திலும் டிக்கெட் விற்பனையைத் தொடர்ந்து வரும்‘சீன்’படத்தின் இந்தப் பயணம் தற்போது திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.