திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனித்துவமான டைட்டிலை பெற்ற 6 நடிகர்கள்.. கமலுக்கு உலகநாயகன் என பெயர் வைத்தது யார் தெரியுமா?

Ulaga Naaygan Kamal Haasan: ஒரு நடிகர் இரண்டு அல்லது மூன்று படங்கள் ஹிட் கொடுத்தவுடன் அவருக்கு ரசிகர்களாலும் அல்லது பிரபலங்களாலும் ஏதாவது ஒரு பட்டம் கொடுக்கப்படும். பின்னர் அது காற்றோடு பறந்து போகும் இந்த ஆறு முன்னணி ஹீரோக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டம் இன்று அவர்களுடைய அடையாளமாகவே மாறிவிட்டது. இவர்களுக்கு இந்த பட்டங்கள் எப்போது கொடுக்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.

தளபதி: கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் தாண்டி இளைய தளபதியாக அறியப்பட்டவர் நடிகர் விஜய். இவருக்கு ரசிகன் திரைப்படத்தின் போது இந்த இளைய தளபதி பட்டம் கொடுக்கப்பட்டது. விஜய்யின் பேவரட் இயக்குனரான அட்லி தான் அவரை இளைய தளபதியிலிருந்து தளபதி விஜய்யாக மாற்றியவர்.

Also Read:சிம்புவை தூக்கிவிட படாத பாடுபடும் கமல்.. செஞ்ச சத்தியத்தை காப்பாற்றும் ஆண்டவர்

நடிப்பின் நாயகன்: நடிப்பின் நாயகன் என்றால் அது எந்த ஹீரோ என்று நம்மில் பலருக்கும் தெரியாது. இதற்கு காரணம் அந்த ஹீரோ தற்போது அந்த பட்டத்தை பயன்படுத்தவில்லை. நந்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய சூர்யாவுக்கு தான் அந்தப் படத்தில் இந்த பட்டம் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் சூர்யா அதை தொடர்ந்து உபயோகப்படுத்தவில்லை. அந்த பட்டத்தை அவர் உபயோகப்படுத்தவில்லை என்றாலும் உண்மையிலேயே இன்று நடிப்பின் நாயகனாக ஜொலிப்பவர் அவர்தான்.

உலகநாயகன்: தமிழ் சினிமா உலகிற்கு அகராதியாக இருப்பவர் கமலஹாசன். இவரை உலக நாயகன் என்று அடையாளப்படுத்துகிறோம். இவருக்கு இந்த பெயரை வைத்தவர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். தெனாலி திரைப்பட ரிலீசின் போது தான் தியேட்டரில் இந்த டைட்டில் காட்டு முதல்முறையாக உபயோகப்படுத்தப்பட்டது. கமலுக்கு முதலில் இது போன்ற பட்டம் கொடுத்தது பிடிக்கவே இல்லையாம். பின்னர் இயக்குனரின் கட்டாயத்தின் பெயரில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

தல: நடிகர் அஜித்குமாருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அதிரடி ஆக்சன் திரைப்படம் தீனா. இந்த படத்தில் ஒரு காட்சியில் மகாநதி சங்கர் அஜித்தை தல என்று அழைத்திருப்பார். அதுவே அஜித்தின் பெயராக மாறியது. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் இனி தன்னை யாரும் தல என்று அடையாளப்படுத்தக்கூடாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்.

Also Read:ஓஹோ கொரியன் படங்களை காப்பியடிப்பதன் சங்கதி இதுதானா.? கமல் படமே சுட்ட மூவி தான்

சூப்பர் ஸ்டார்: சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தை கூட சொல்லும் என்று அவருடைய படத்தின் பாடலையே உதாரணமாக சொல்லலாம். இன்று வரை சூப்பர் ஸ்டார் என்று திரையரங்கில் வரும் டைட்டில் கார்டுக்கு பயங்கர வரவேற்பு இருக்கிறது. 1978 ஆம் ஆண்டு முதல் ரஜினி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். அப்போது எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் ஆக்ட்டிவாக இருந்த காலம் என்பதால் ரஜினி இந்த பெயரை ஏற்க ரொம்பவே தயங்கினார். இன்று வரை இந்த பட்டம் தமிழ் சினிமாவை சுழற்றிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

சீயான்: கென்னடி ஜான் விக்டர், விக்ரம் ஆனதே மிகப்பெரிய கதை என்றால், அந்த விக்ரம், சீயான் விக்ரமானது சுவாரஸ்யமான தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். விக்ரமை தமிழ் சினிமாவிற்கு அடையாளப்படுத்திய சேது படத்தில் இயக்குனர் பாலா இந்த சீயான் என்னும் பெயரை பட்ட பெயராக பயன்படுத்தி இருப்பார். இந்த பெயருக்கு அர்த்தம் கெட்டிக்காரன் என்று ஒரு பேட்டியில் அவர் சொல்லி இருக்கிறார். சேது படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரம், சீயான் விக்ரம் என்றே அழைக்கப்படுகிறார்.

Also Read:வார்த்தையே இல்லாமல் நவரசத்தையும் கொட்டி ஸ்கோர் செய்த கமல்.. ஒரே ஷாட்டில் கொடுத்த 12 எக்ஸ்பிரஷன்ஸ்

Trending News