MK Stalin-Modi: நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அதை அடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
அதற்கான தீவிர பிரச்சாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் ராஜஸ்தானில் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.
காங்கிரஸ் நாட்டின் செல்வத்தை இஸ்லாமியர்களுக்கு தான் முதலில் கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல தலைவர்களின் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
அந்த வரிசையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த பேச்சின் மூலம் பிரதமர் மத உணர்வுகளை தூண்டி விடுகிறார்.
பாஜகவுக்கு ஸ்டாலின் கண்டனம்
அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் இப்படி பேசி பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறார். இது போன்ற பேச்சுகளை கேட்டு தேர்தல் ஆணையமும் காதை மூடிக்கொண்டு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க பாஜக அண்ணாமலை மீது சில வழக்குகள் பாய்ந்துள்ளது. அதாவது தேர்தல் நாளன்று கடலூரைச் சேர்ந்த கோமதி என்பவர் திமுகவினரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர்களை கைது செய்ய வேண்டும் என தன்னுடைய கண்டனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது இது தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் நிலையத்தில் திமுக பிரமுகர் சுவாமிநாதன் புகார் கொடுத்துள்ளார்.
அதன்படி வன்முறையை தூண்டியது, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியது உட்பட மூன்று வழக்குகள் அண்ணாமலையின் மீது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படியாக பாஜக தேர்தல் நேரத்தில் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.