புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அகரம் விதை திட்டத்தின் மூலம் பயின்ற மாணவர்கள்.. 15 ஆண்டுகளாக சூர்யா செய்த சாதனை

Suriya Agaram Foundations: சூர்யா சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 27 வருடங்கள் ஆகிய நிலையில் சுமார் 44 படங்களில் நடித்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவரை கேலி கிண்டல் பண்ணிய மக்கள் மத்தியில் என்னாலையும் நடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டி ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் இதுவரை நடிக்காத அளவிற்கு மிகப் பிரம்மாண்டமாக அதிக பொருட்ச அளவில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார்.

இப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகப்போகிறது. இதனை தொடர்ந்து பல வாய்ப்புகளை பெற்று வரும் இவர் மனைவிக்காக தற்போது பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். இதை தெரிந்ததும் சூர்யாவிற்கு கொஞ்சம் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வந்தது. ஆனாலும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாத சூர்யா தொடர்ந்து அவருடைய விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.

15 ஆண்டுகளாக செய்து வரும் சாதனை

அந்த வகையில் இவருடைய பிறந்தநாளுக்கு எங்கே எந்த திசையில் இருந்தாலும் ரத்ததானம் வழங்குவேன் என்று வாக்கு கொடுத்ததை நிறைவேற்றும் விதமாக பிறந்தநாள் அன்று ரத்த தானம் வழங்கினார். அதே மாதிரி இவர் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அகரம் விதைத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். அதை நினைவுபடுத்தும் விதமாக நேற்று 15 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்து இருக்கிறேன் என்று சூர்யா அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அகரம் விதைத் திட்டத்தை ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. 12 ஆம் வகுப்பு வரையில் கிராமப்புற அரசு பள்ளியில் படித்த 5287 மாணவர்கள் 350 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்த விதைத்திட்டம். அத்துடன் 3440 முன்னாள் மாணவர்கள் மற்றும் 1850 இப்ப உள்ள மாணவர்களும் இருக்கிறார்கள்.

suriya (2)
suriya (2)

இத்தனை மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்து வரும் தன்னார்வலர்கள், கல்லூரிகள், நன்கொடையாளர்கள், பயிற்சியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சூர்யா பதிவிட்டு இருக்கிறார்.

அத்துடன் ஊர் கூடித் தேர் இழுப்பது போன்றுதான் அகரம் பணிகள். என்று 15 ஆண்டுகளாக சூர்யா செய்து வரும் சாதனையை பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். பொதுவாக ஒரு அமைப்பை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த வகையில் 15 ஆண்டுகளாக தொடர்ச்சி ஆக சமூக சேவை செய்து வருவது மிகப்பெரிய சாதனைதான். அப்படிப்பட்ட இவருடைய முயற்சிக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

1000கோடி வசூலுக்கு காத்திருக்கும் கங்குவா

Trending News