வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாலா அப்படிப்பட்ட மனுஷன் கிடையாது.. வணங்கான் படப்பிடிப்பில் என்ன நடந்தது தெரியுமா.?

கடந்த சில மாதங்களாக சோசியல் மீடியாவில் சூர்யா-பாலா இருவரின் மோதலை குறித்த தகவல் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அதுகுறித்து பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா வெளிப்படையாக பேசியுள்ளார்.

சூர்யாவின் 41-வது படமான வணங்கான் படத்தை இயக்குனர் பாலா இயக்கிக் கொண்டிருக்கிறார். பிதாமகன் படத்திற்குப் பிறகு 19 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் இவர்களது கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்திற்கு ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் பாலா அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளையும் வாழ்வியலையும் அப்படியே படமாக்குகிறார். இந்தப் படத்தில் சண்டை இயக்குனராக பணிபுரியும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா சமீபத்தில் அளித்த பேட்டியில் சூர்யா-பாலா மோதல் குறித்து உடைத்துப் பேசியுள்ளார்.

பாலா ஒரு குழந்தை. சூர்யாவிற்கும் பாலாவுக்கும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பின்போது எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக கதை கட்டி விடுகின்றனர். தற்போது வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதற்கு காரணம் அடுத்த படப்பிடிப்புக்கான இடைவெளிதான்.

தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்ட படக்குழுவினர் ஓய்வு எடுப்பதற்காகதான் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இயக்குனர் பாலா படப்பிடிப்புத் தளத்தில் தன்மையுடன் நடந்து கொள்வார்.

யாராவது தப்பு செய்தால் அவர்களிடம் அதைத் திருத்திக் கொள்ளும் படி சொல்வார். ஆனால் அதை மீண்டும் மீண்டும் செய்யும்போதுதான் கோபப்படுவார். இது எல்லா இயக்குனர்களுக்கும் வருவது இயல்பு. ஏனென்றால் அப்போதுதான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பவர்களை கட்டுப்படுத்தி படப்பிடிப்பை நடத்த முடியும்.

ஆகையால் ஒவ்வொரு இயக்குனர்களும் சூட்டிங் ஸ்பாட்டில் கொஞ்சம் கடினமாக தான் நடந்துகொள்வார்கள். அப்போதுதான் அவர்களுக்கு வேண்டியவாறு படம் உருவாகும் என பாலாவை பற்றிய உண்மைகளை ஸ்டண்ட் சில்வா சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Trending News