சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தத்தியாக இருக்கும் பாண்டியனின் வாரிசு.. வீட்டில் பொய் சொல்லி ராஜியை கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் டிரைவர் வேலைக்கு ஆஃபர் வந்ததால் காலேஜில் படிக்கும் நண்பர்களை கூட்டிட்டு டூர் போகும் ஒரு பெண்ணை பிக்கப் பண்ணிக்கிட்டு போகிறார். அந்த சமயத்தில் அந்த பெண்ணின் நண்பர்கள் என்று இரண்டு பேர் காருக்குள் ஏறி தேவையில்லாத சேட்டைகளை செய்வதால் அந்த பொண்ணு ரொம்பவே பயப்பட ஆரம்பித்துவிட்டது.

அத்துடன் கூட வரும் தோழிகள் வரவில்லை என்பதால் ஏதோ தவறாக நடக்க போகிறது என்பதை கதிரும் உணர்ந்து விட்டார். அந்த வகையில் எப்படியாவது அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த கதிர், கார் பேட்டரி ரொம்ப ட்ரை ஆகி விட்டது கொஞ்சம் ரெண்டு பேரும் இறங்கி தள்ளினால் போய்விடும் என்று சொல்லி அவர்களை கீழே இறங்க வைக்கிறார்.

அப்படி அவர்கள் இறங்கி காரை தள்ளும்பொழுது அவர்களிடமிருந்து அந்த பெண்ணை கூட்டிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார். பிறகு அந்த பெண்ணை பத்திரமாக அவர் வீட்டு வாசலில் இறக்கி விட்டு கிளம்பி விடுகிறார். அடுத்ததாக பாண்டியன் சொன்னபடி தங்கமயிலை கூட்டிட்டு சரவணன் வேலை விஷயமாக ஸ்கூலுக்கு போகிறார். ஆனால் போகும் வழி முழுவதும் தங்கமயில் இந்த வேலை வேண்டாம் என்று சொல்லி பார்க்கிறார்.

ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத சரவணன், பாண்டியன் சொன்னபடி அந்த பள்ளிக்கூடத்திற்கு போய் பேச வேண்டிய ஆளை பார்த்து பேசி விடுகிறார்கள். அதன்படி தங்கமயிலிடம் சில கேள்வி கேட்டதும் பாண்டியனுக்காக உங்களுக்கு வேலை உண்டு. திங்கட்கிழமையிலிருந்து வேலைக்கு வந்து விடுங்கள் என்று சொல்லி விடுகிறார்.

ஆனால் தங்கமயில் படிக்காமல் இருப்பதால் எப்படி வேலை பார்ப்பது என்று தெரியாமல் பதட்டத்துடன் பயப்பட்டு வருகிறார். அந்த வகையில் முகத்தை பார்த்து கூட கண்டுபிடிக்காத முடியாத அளவிற்கு சரவணன் ரொம்பவே தத்தியாக இருக்கிறார். பிறகு அனைவரும் வீட்டில் இருக்கும் பொழுது கதிருக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வருகிறது.

அதாவது நகை காணும் என்று நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு போனவரை நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அந்த வகையில் நீங்களும் உங்க மனைவியும் இப்பொழுதே போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்று கூப்பிடுகிறார்கள். ஆனால் எப்படி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி ராஜி கூட்டிட்டு போவது என்று யோசித்த கதிர், கோமதி இடம் நானும் ராஜியும் ஹோட்டலில் போய் சாப்பிட்டுக் கொள்கிறோம் என பொய் சொல்லி கூட்டிட்டு போய் விடுகிறார்.

கோமதியும் தன் மகனும் மருமகளும் சந்தோசமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். இரண்டு பேருக்கும் பிடிக்க ஆரம்பித்து விட்டது என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். ஆனால் போலீஸ் ஸ்டேஷன் போவதற்காக தான் கதிர் பொய் சொல்லி இருக்கிறார். பிறகு கதிர் மற்றும் ராஜி இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த நிலையில் ராஜியை ஏமாற்றிவிட்டு நகையை பறித்துவிட்டு போன கண்ணனை காட்டுகிறார்கள்.

கண்ணனை பார்த்ததும் உச்சகட்ட ஆவேசத்தில் ராஜி இருக்கிறார். ஆனாலும் கண்ணன் நகையும் பணத்தையும் செலவழித்து விட்டார் என்று சொல்லிய நிலையில் மேற்கொண்டு கண்ணன் மீது புகார் கொடுத்து விடுவார்கள். அடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த ராஜி மற்றும் கதிரிடம், மீனா அனைத்து உண்மைகளையும் கேட்டு தெரிந்து கொள்வார்.

அடுத்ததாக வீட்டில் இறக்கி விட்ட பெண் வீட்டிற்கு வரவில்லை என்று கதிர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் வரப்போகிறது. அதன்படி கதிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடுவார். ஆனாலும் கதிர் மீது எந்த தவறும் இல்லை என்று பாண்டியன் நம்பிய நிலையில் ராஜி நிச்சயம் கதிர்காக நடந்து உண்மையை கண்டுபிடித்து கதிரை காப்பாற்றி விடுவார்.

Trending News